சித்த வைத்திய அகராதி 12751 - 12800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12751 - 12800 மூலிகைச் சரக்குகள்


வெண்நவ்வல் - வெண்நாவல்மரம்
வெண்நொச்சி - ஐந்திலைநொச்சிச்செடி
வெண்பசீராக்கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
வெண்பசலிக்கொடி - சுவேதப்பசலிக்கொடி
வெண்பச்சைக்கட்லை - வெள்ளைப்பச்சக்கடலை
வெண்பாதிரிமரம் - பாதிரிமரம்
வெண்புரசமரம் - வெண்போதமரம்
வெண்புலிவிதை - பூலிவிதை
வெண்மணிச்செடி - நறுவீழிச்செடி
வெண்மாதுளை - வெள்ளைமாதளைச்செடி
வெண்மிளகாய் - வெள்ளைமிளகாய்
வெண்மிளகியரிசி - நெல்லரிசி
வெண்மிளகு - சுவேகமிளகு
வெண்மிளகுதக்காளி - மிளகுதக்காளி
வெண்முளகாய் - சுவேதகாய்
வெண்முள்ளிக்கீரை - முள்ளிக்கீரை
வெதிர்காமரம் - மூங்கில்மரம்
வெதுப்பச்சூரி - நத்தைசூரிவிரை
வெதுப்படக்கி - தலைசுருளிக்கொடி
வெதும்பாச்செடி - வெள்ளைதயாளைச்செடி
வெந்தநெல்லரிசி - புழங்கலரிசி
வெந்தபிகிரி - சுடுபிணம்
வெந்தயச்செடி - விமலோதயச்செடி
வெந்தலமரம் - குங்கிலியமரம்
வெந்தலயம் - வெந்தயம்
வெந்தேக்கிரி - தீயொதல்
வெந்தேக்குமரம் - பின்ளைத்தேக்க
வெந்தேட்கொடுக்குச்செடி - பெருந்தேட்கொடுக்குச்செடி
வெந்தோதிக விரை - அழிஞ்சில்விரை
வெந்தோன்றிகாச் செடி - கண்ணுப்பீழைச்செடி
வெந்தோன்றிக்கிழங்கு - நாவிக்கிழங்கு
வெப்பாலைமரம் - பாலைமரம்
வெம்பிளிக்கைச்செடி - செவ்வெருக்கிலைச்செடி
வெய்யோன் - சூரியன்
வெருகடி - மூன்றுவிரல்கொண்டது
வெருகடுக்கொடி - பூனைக்காலிக்கொடி
வெருகக்கிழங்கு - மெருகன் கிழங்கு
வெருகாமுள்ளி - நீர்முள்ளி விதை
வெருணிச்செடி - பாவட்டைச்செடி, ஆடுதீண்டாப்பாளைச்செடி
வெருவந்தக்கொடி - சௌந்திரியக்கொடி
வெலிகம் - கற்றாழை
வெலிகயக்கீரை - சொக்காக்கீரை
வெல்லம் - கரும்பின்வெல்லம்
வெளிச்சிப்பிசின் - விளாம்பிசின்
வெளித்தாமரை - ஆகாயத் தாமரை
வெளித்துகமரம் - முருக்குமரம்
வெளிநீர் - ஆகாயநீர்
வெளிறுமரம் - நறுவிளிமரம்
வெளுப்பத்தி - எலும்ப
வெள்வெங்காயம் - வெள்ளைவெங்காயம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal