சித்த வைத்திய அகராதி 11301 - 11350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11301 - 11350 மூலிகைச் சரக்குகள்


மாச்சக்காய் - மாசிக்காய்
மாச்சரேகச்செடி - மிளகாய் நங்கைச்செடி
மாச்சிகப்பூண்டு - பாம்புகொல்லிப்பூண்டு
மாஞ்சிமரம் - மகிழமரம்
மாஞ்சில்மரம் - சடாமாஞ்சில்
மாடக்கொள்ளுச்செடி - சிறுவீடுகொள்ளுச்செடி
மாடப்பயறு - உளுந்துப்பயறு
மாடனக்கோசு - முட்டைக்கோசு
மாடன் - துருசு
மாடியவக்கொடி - மிளகுசாரணைக் கொடி
மாட்டுக்குளம் படி - ஆவின்குளம் படி
மாட்டுச்சாபிகம் - கோரோசனை
மாட்டுக்சிலும்பன்செடி - பெருஞ்சிலும்பான் செடி
மாணிக்கப்பூடு - பேரண்டம்
மாதவபிரியக்கொடி - செம்பூசணிக்கொடி
மாதவிக்கொடி - குருக்கத்திக்கொடி
மாதவிடாய்நீர் - சூதகநீர்
மாதளைமரம் - இனிப்பு மாதளைமரம்
மாதிகநெருஞ்சில் - யானை நெருஞ்சிச்செடி
மாதிகாமரம் - முட்பலாமரம்
மாதிபக்கொடி - நெருஞ்சிக்கொடி
மாதிபாவறுகு - யானையறுகு
மாதிமிமரம் - மாமரம்
மாதிரப்பூ - மல்லிகைப்பூ
மாதிரிவிடையம் - அதிவிடையம்
மாதிலகச்செடி - பொன்னூமத்தைச் செடி
மாதுங்கக்கொடி - கொம்மட்டிக் கொடி
மாதுரகக்கொடி - மல்லிகைக்கொடி
மாதுலச்செடி - ஊமத்தைச்செடி
மாதுலநாதச்செடி - கருந்துளசிச்செடி
மாதுளங்கமரம் - மாதளைமரம்
மாதேசிக்காய் - எலுமிச்சங்காய்
மாதேவிச்செடி - சீதேவிசெங்கழுநீர்ச்செடி
மாத்திரிகம் - வசம்பு
மாந்தக்கொடி - சிசுமாந்தக்கொடி
மாந்தப்பத்திரம் - வில்வயிலை
மாந்தப்புல் - காவட்டம்புல்
மாந்தலவேம்பு - சருக்கரை வேம்புமரம்
மாந்திரகாமரம் - மாமரம்
மாந்திரவஞ்சிவிரை - சாப்பிராவிரை
மரபலச்செவிக் கீரை - எலிச்செவிக்கீரை
மாவேலகமரம் - சவுக்குமரம்
மாமரக்கிளுவைமரம் - மாங்கிளுவைமரம்
மாமரப்பட்டை - அக்காரப்பட்டை
மாமரம் - தேமாமரம்
மாமலிமரம் - அத்திமரம்
மாமலைச்செடி - பேய்மாலைச் செடி
மாமிசிமாஞ்சில் - சடாமாஞ்சில்
மாமுடிகக்கொடி - நெட்டிக்கொடி
மாமுட்டிரைமரம் - காஞ்சிரை மரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal