சித்த வைத்திய அகராதி 11201 - 11250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11201 - 11250 மூலிகைச் சரக்குகள்


மலைப்பிரமி - பெரும்பிரமிச்செடி
மலைப்பிராசிதமரம் - பிராமரம்
மலைப்புகையிலை - காட்டுப்புகையிலை
மலைப்பூசித மரம் - மலையாத்திமரம்
மலைப்பூவரசு மரம் - காட்டுப்பூவரசுமரம்
மலைப்பூவிகக் கொட்டை -சேங்கொட்டை
மலைமஞ்சரளிமரம் - மலையரளி மரம்
மலைமதம் - கல்மதம்
மலைமந்தாரை - காட்டுமந்தாரை
மரைமந்திகாப்பூ - சாமந்திப்பூ
மலைமல்லிகை - காட்டுமல்லிகைக் கொடி
மலைமாதுகம் - கந்தகம்
மலைமாமரம் - புளிப்புமாமரம்
மலைமாமிகவிரை - அழிஞ்சில் விரை
மலைமுசுட்டைக் கொடி - முசுட்டைக்கொடி
மலைமுரிகச்செடி - கல்லூரிச்செடி
மலைமுருங்கை - கசப்புமுருங்கைமரம்
மலைமுல்லை - தௌதிகமுல்லை
மலைமுன்னைமரம் - பெருமுன்னை மரம்
மலைமூங்கில்மரம் - பெருமூங்கில் மரம்
மலையகத்திமரம் - கசப்பகத்திமரம்
மலையத்தி - கல்லத்திமரம்
மலையந்தி மல்லிகைச் செடி - அந்திமந்தாரைச் செடி
மயலயம் - சந்தனம், களபம்
மலையரசிமரம் - சந்தனமரம்
மலையரளிமரம் - மஞ்சளலரிமரம்
மலையாசலமரம் - மலைவாழைமரம்
மலையாத்திமரம் - ஆத்திமரம்
மலையாமணக்கு மரம் - வரையாமணக்குமரம்
மலையாரம் - சந்தனம்
மலையாவிகச்செடி - மிளகுச்செடி
மலையானிகம் - மலைக்காளான்
மலையின்முனிவன்மரம் - அகத்திமரம்
மலையீருள்ளி - பெருவெங்காயம்
மலையுருக்கன்கொடி - காட்டுவெற்றிலைக் கொடி
மலையெருக்கிலை மரம் - வரையெருக்கிலை மரம்
மலையேந்திவேர் - மலைதாங்கிவேர்
மலையேலம் - பேரேலம்
மலைவள்ளிக்கொடி - பழிக்கிழங்குக் கொடி
மலைவாசிமரம் - வசுவாசிமரம்
மலைவாழைமரம் - கானல்வாழை
மலைவீரியம் - அன்னபேதி
மலைவெட்புசம் - சந்தனக்களபம்
மலைவெற்றிலை - காட்டுவெற்றிலை
மலைவேசிகச்செடி - மலைப்பச்சைச்செடி
மலைவேம்பு மரம் - மதகிரி வேம்பு மரம்
மலோசிகப்பிசின் - இலவம்பிசின்
மல்லகவரிசி - சிறுவாலுளுவையரிசி
மல்லசம் - மிளகு
மல்லி - கொத்தமல்லி, உருளரிசி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal