சித்த வைத்திய அகராதி 10651 - 10700 மூலிகைச் சரக்குகள்
பைன்சுமரம் - சீமை மரம்
பொக்கணபந் தூக்கிக்கொடி - முடக்கத்தான்கொடி
பொக்கலாங்கொடி - பெருமருந்துக்கொடி
பொக்கவிதைச்செடி - நாறுகரந்தைச்செடி
பொக்குலிப்பிசின் - சாலாம்பிசின்
பொங்கர்மரம் - இலவமரம்
பொங்காராமல்லிச் செடி - வர்ண அந்திமல்லிச்செடி
பொங்கிலீகச்செடி - நீர்முள்ளிச்செடி
பொடிக்கட்டுக்கொடி - சிறுகட்டுக் கொடி
பொடிச்சிகமரம் - நாரைமரம்
பொடித்தலைமரம் - விடத்தலைமரம்
பொடித்திரித்தாழை - தழுதாழைச்செடி
பொடிப்புகையிலை - நாசிகாசூரணப் புகையிலை
பொடிப்பூரிகக்கொடி - நிலக்கடலைக் கொடி
பொடுதலை - பெரும்பொடுதலைக் கொடி
பொடுதாசிப்பட்டை - புழக்கப்பட்டை
பொட்டளை - வெடியுப்பு
பொதினாக்கீரை - புதினாக்கீரை
பொதீலகப்புல் - பூனைப்புல்
பொத்தைக்கள்ளி - முப்பட்டைக்கள்ளி
பொத்தைப்புளிமரம் - பொந்தம்புளிமரம்
பொந்தம்புளி - பப்பரப்புளிமரம்
பொந்திகம் - பொறித்தேற்றாமரம்
பொய்கைநாரிநீர் - தாமரைக்கொடி
பொய்சொன்னான்பூ - தாழம்பூ
பொரி - பொரிக்காரம்
பொரிகாரம் - வெண்காரம்
பொரிப்பூண்டு - தேங்காய்ப்பூண்டு
பொரிமலர்மரம் - புங்குமரம்
பொரிமா - பொரியரிசிமா
பொருதாகிச்செடி - பெருந்தும்பைச்செடி
பொருதாகிப்பூ - நீலோற்பலப்பூ
பொருத்தவிக்கள்ளி - மான்செவிக் கள்ளி
பொரும்பிலிச்செடி - காணப்பயற்றுச்செடி
பொருவாகைமரம் - பெருவாகைமரம்
பொழுதுதிரும்பிச்செடி - சூரியகாந்திச்செடி
பொறிகடலை - சிறுகடலை, பொறித்தகடலை
பொறிக்காசாவரளி - மஞ்சலரி மரம்
பொறிக்காளான் - பேய்க்காளான்
பொறிக்கேதனப்புல் - மூகைப்புல்
பொறித்தேற்றாமரம் - பேய்த்தேற்றாமரம்
பொறிநீர் - விந்துநீர்
பொறிப்பூண்டு - தேங்காய்ப்பூண்டு
பொற்காசிகச்செடி - கொள்ளுச்செடி
பொற்காஞ்சகி - மஞ்சிட்டி
பொற்காஞ்சிரை - காஞ்சிரைமரம்
பொற்கூவலஞ்செடி - குட்டிவிளாச்செடி
பொற்கொன்னை - சரக்கொன்னைமரம்
பொற்கோபிதக்கொடி - மஞ்சள் வெற்றிலைக்கொடி
பொற்சீந்திற்கொடி - மஞ்சட்சீந்திற்கொடி
சித்த வைத்திய அகராதி 10651 - 10700 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal