சித்த வைத்திய அகராதி 9901 - 9950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9901 - 9950 மூலிகைச் சரக்குகள்


பிறாமுட்டி - பிராபிரக்கிச் செடி
பிறிதேகியம் - பொன்முசுட்டைக் கொடி
பீறியகசீரம் - பிளவுசீரகம்
பிறியகச்செடி - ஞாழற்செடி
பிறியகமரம் - கடம்பமரம்
பிறியாநங்கைச் செடி - வேப்பிலைநங்கைச் செடி
பிறைமலர் - அகத்திமலர்
பின்றுடரிச்செடி - பெண்துடரிச் செடி
பின்றொடரிச்செடி - ஆடையொட்டிச் செடி
பின்னியாக்கம் - குந்துருக்கம்
பின்னிரோவச்செடி - முட்சுண்டைச் செடி
பின்னைமரம் - புன்னைமரம்
பீகசாரி - இளையவன்
பீகநாபி - மூத்தவன்
பீககலாத்திச் செடி - சங்கங்குப்பிச் செடி
பீசகவயக் கள்ளி - முயற்செவிக் கள்ளி
பீசம் - ஆண்குறிக்கீழ்விரை
பீச்சுவிளாத்திச்செடி - பீஞ்சற்செடி
பீஞ்சள் - பீச்சுவிளாத்திச்செடி
பீஞ்சாசிகச்செடி - தகரைச்செடி
பீடமத்துளசிச்செடி - முட்டுளசிச் செடி
பீடி - புகைப்பீடி
பீசுகசிமிட்டி - பெருஞ்சிமிட்டிச் செடி
பீதகசேபிதம் - தாம்பூலம்
பீதகதலிமரம் - செவ்வாழைமரம்
பீதகலிகம் - பீதரோகணி
பீககவேர் - இருவேலி வேர்
பீதகாண்டகச்செடி - செம்முள்ளிச் செடி
பீதகாரகமரம் - வேங்கைமரம்
பீதகாரக்கீரை - செம்புளிச்சக்கீரை
பீதகாவேரம் - மஞ்சள்
பீதகேசச்செடி - பொற்றலைக் கரிப்பான்செடி
பீதக்கற்றாழை - மருட்கற்றாழை
பீதசந்தனம் - மஞ்சட்சந்தனம்
பீதசம்பகமரம் - சண்பகமரம்
பீதசாரகம் - சந்தனம்
பீதசாரக்கீரை - செங்கீரை
பீதசாரக்கொடி - செவ்வல்லிக்கொடி
பீதசாரதக்கிழங்கு - சருக்கரைவள்ளிக் கிழங்கு
பீதசாரதிமரம் - வேங்கைமரம்
பீதசுகாதீதமரம் - மஞ்சணத்திமரம்
பீதசூதிச்செடி - செம்மல்லிகைச் செடி
பீததாருக்கீரை - செம்புளிச்சைக்கீரை
பீததாருக்கொடி - செங்கொடி வேலி
பீததாருமரம் - புன்னைமரம்
பீதத்தாதிகப்பூடு - திகைப் பூட்டுப்பச்சிலை
பீதத்தாவரை - பொன்னாவரைச் செடி
பீதபீசம் - வெந்தயம்
பீதபூகமாதளைச் செடி - கொம்மட்டி மாதளைச் செடி
பீதபூகிதமரம் - செண்பகமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal