சித்த வைத்திய அகராதி 9951 - 10000 மூலிகைச் சரக்குகள்
பீதபூதிச்செடி - செம்மல்லிகைச்செடி
பீதபூரம் - கசப்புமாதளை மரம்
பீதம் - மஞ்சள்
பீதராகமம் - தாமரைநூல்
பீதரோனணி - உருத்திரோகணி
பீதரோகணிநெருஞ்சில் - மஞ்சள் நெருஞ்சிக்கொடி
பீதரோகணிநெல் - மலைநெல்
பீதர் - மஞ்சள்
பீதலம் - பித்தளை
பீதவண்ணக்காய் - கடுக்காய்
பீதனிமரம் - முன்னைமரம்
பீதைமரம் - மருதோன்றிமரம்
பீநாறிச்சங்குச் செடி - சங்கங்குப்பிச்செடி
பீநாறிப்பட்டை - பெருமரப்பட்டை
பீநாறிமரம் - பெருமரம்
பீமசாரிவேம்பு - மதகரிவேம்பு
பீரங்கொடி - பீர்க்குக்கொடி
பீரமந்தமரம் - அரசுமரம்
பீருகாரோகணி - பீதரோகணி
பீருதந்திக் கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
பீர்க்கக்கொடி - பீர்க்குக்கொடி
பீர்க்கங்கொடி - வரிப்பீர்க்குக் கொடி
பீலகயமரம் - செந்தாழைமரம்
பீவேலா - கருவேலாமரம்
பீவேலிகக்கொடி - வேலிப்பருத்திக் கொடி
பீழைச்செடி - கண்ணுப்பீழைச்செடி
பீழைவச்சிரமரம் - விடப்பூலா மரம்
பீனம்பாசிக்கொடி - பாசிக் கொடி
பீனயக்கமரம் - புரசுமரம்
பீனிசப்புல் - பீனசப்புல்
பீனிசமொச்சை - பெருமொச்சை
பீனிசம்போக்கிச்செடி - தைவயலிச்செடி
பீனிகவவரை - வடநாட்டவரை
புகர் - வெள்ளி
புகர்நீபமரம் - வெண்கடம்புமரம்
புகழ்மரம் - அகத்திமரம்
புகாமோதிப்புல் - விஸ்வாமித்திரன்புல்
புகைநீர் - திராவகம்
புகைமடக்கி - வெண்காரம்
புகையிலைச்செடி - பிரமபத்திரச் செடி
புகையூபமரம் - தோணிமரம்
புக்கிகாமரம் - பிராய்மரம்
புக்குலிமரம் - வில்வமரம்
புங்குமரம் - புங்கன்மரம்
புசகப்பூடு - கீரிப்பூடு
புடகாமிகச்செடி - செந்நாயுருவிச் செடி
புடகிலாஞ்செடி - சிலந்திநாயகச்செடி
புடலங்கொடி - நெடும்புடற்கொடி
புடவிமூலக்கொடி - குறட்டைக் கொடி
புடாரமுளைச்செடி - செந்நாயுருவிச் செடி
சித்த வைத்திய அகராதி 9951 - 10000 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal