சித்த வைத்திய அகராதி 8001 - 8050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8001 - 8050 மூலிகைச் சரக்குகள்


திருநீற்றுப்பத்திரி - திருநீற்றுப்பச்சிலை
திருமரம் - அரசமரம்
திருமலர் - தாமரைப்புஷ்பம்
திருமலர்க்கொடி - தாமரைக் கொடி
திருமாலிகமரம் - கானல்முருங்கைமரம்
திருமாலுந்திப்பூ - தாமரைப்பூ
திருமால்கரந்தை - விஷ்ணுகரந்தைச்செடி
திருமால்கொப்பூழ் - சுளுக்குநாயகச்செடி
திருமேனிச்செடி - குப்பைமேனிச்செடி
திருமேனியழகிச்செடி - குப்பைமேனிச்செடி
திருரசமேனிச்செடி - சூரததாவரைச்செடி
திருவட்டம்பிசின் - விளாம்பிசின்
திருவமரம் - வெள்ளகில்மரம்
திருவாத்திமரம் - ஆத்திமரம்
திருவாலமூலி - செவ்வாமணக்குச்செடி
திருவாலிப்பூண்டு - சுனைப்பூண்டுச்செடி
திருவிலைப்பூடு - கீரிப்பூடு
திருவிளப்பூண்டு - திராய்ப்பூண்டு
திருவிளவேர் - சிவதைவேர்
திருவுளவனிதமரம் - சூழ்ப்பிராய்மரம்
திரேந்திகப்பூண்டு - திராய்ப்பூண்டு
திரைகடற்பாசி - கடற்பாசி
திரையலாவிக்கொடி - வெற்றிலைக்கொடி
திரையாப்புல் - கோரைப்புல்
திலகவிருட்சம் - எள்ளுவிருட்சம்
திலதைலம் - நல்லெண்ணெய்
திலபருணிகை - சந்தனம்
திலபன்னிச்செடி - தைவேளைச்செடி
திலம் - எள்ளு
திலரசம் - எள்ளெண்ணெய்
திலவகம் - வெள்ளி
தில்லபம் - ஒட்டுதல்
தில்லைவிருட்சம் - பொன்னம்பலவிருட்சம்
திவசாத்தியச்செடி - அந்திமல்லிகைச்செடி
திவிதிராட்சப்பழம் - கொடிமுந்திரிப்பழம்
திவ்வியகந்தம் - கிராம்பு
திறிகண்டக்கொடி - நெருஞ்சிற்கொடி
திறிதியவள்ளிக்கிழங்கு - செவ்வள்ளிக்கிழங்கு
திறிதூதகச்சுரை - கின்னாக்சுரை
திறிதேகிகம் - பற்படாகம்
திறிதேசிதக் கிழங்கு - கிச்சிலிக் கிழங்கு
திறிபாதிதச்செடி - சிறுபுள்ளடிச்செடி
திறிலாகிதப்பிரண்டை - கிழங்குப்பிரண்டை
திறிலிங்கமரம் - தான்றிமரம்
திறிலேசகிச்செடி - குடமிளகாயச்செடி
திறிலேசரிச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
திறிவாசச்செடி - கத்தரிச்செடி
திறைவிக்குறட்டை - முக்குறட்டைச்செடி
தினகரச்செடி - சூரியகாந்திசெடி
தினவாசக்காய் - கத்தரிக்காய்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal