சித்த வைத்திய அகராதி 12851 - 12900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12851 - 12900 மூலிகைச் சரக்குகள்


வெள்ளையலரிச்செடி - அவுரிச்செடி
வெள்ளையவரைக்கொடி - குரும்பவரைக்கொடி
வெள்ளைவுரி - அவுரிச்செடி
வெள்ளையாவிகமரம் - ஆவிமரம்
வெள்ளையாமணக்கு - ஆமணக்குச்செடி
வெள்ளையாமிதக்கீரை - வெண்முள்ளிக்கீரைச் செடி
வெள்ளையாவரை - சுசியாவரை
வெள்ளையீருகொல்லி - வெண்சதாகத மரம்
வெள்ளையீருள்ளி - ஈருள்ளிப்பூண்டு
வெள்ளையூதிதம் - வெண்கடுகு
வெள்ளையூமத்தை - ஊமத்தைச்செடி
வெள்ளையௌளு - நரையௌளு
வெள்ளைவாக்கப்பால் - வெள்ளெருக்குப்பால்
வெள்ளைவாடாமல்லிகை - பால்வாடா மல்லிகைச்செடி
வெள்ளை வாதரக்காட்சிமரம் - வாதரக்காட்சிமரம்
வெள்ளைவிஷ்ணுகரந்தை - சுவேதவிஷ்ணுகரந்தை
வெள்ளைவெட்சிப்பூச்செடி - வெட்சிப்பூச்செடி
வெள்ளைவெற்றிலை - சுவேதவெற்றிலை
வெள்ளைவேசிகச்சிமிட்டி - சிமிட்டிச்செடி
வெள்ளை வேலன்மரம் - வெள்வேலா மரம்
வெறிக்கடுக்காய் - பேய்க்கடுக்காய்
வெறுகடி - மூன்றுவிரற்சேர்த்தல்
வெற்பு - மலை - பருவதம் - கிரி
வெற்றித்தண்டுச்செடி - நுரையிண்டுச்செடி
வெற்றிலைக்கொடி - கருப்புவெற்றிலைக்கொடி
வெற்றிலைத்தண்டுலம் - வேம்பின் மேற்புல்லுருவி
வெற்றிலைவள்ளிக்கிழங்குக் கொடி - நாகவள்ளிக்கிழங்குக்கொடி
வெற்றுகச்செடி - வட்டத்துத்திச்செடி
வென்பீலிகச்செடி - இருவேலிச்செடி
வேகிகக் கொடி - அடம்புக்கொடி
வேசிநங்கைச்செடி - மிளகாய்நங்கைச்செடி
வேங்கைமரம் - திமிசுமரம்
வேசயப்பட்டை - லவங்கப்பட்டை
வேசயப்பத்திரி - லவங்கப்பத்திரி
வேசயப்பூ - லவங்கப்பூ
வேதகம் - கற்பூரம்
வேதவரிசி - வாலுளுவையரிசி
வேதவாரிதிச்செடி - கஸ்தூரியலரிச்செடி
வேதன்காய் - கடுக்காய்
வேதிரிமரம் - இலந்தைமரம்
வேதை - ஏமம்
வேதைக்கன்னிச்செடி - நாய்வேளைச்செடி
வேதைவிருட்சம் - உரோமவிருட்சம்
வேத்திரக்கோரை - உப்பங்கோரை
வேத்திரச்செடி - இலந்தைச்செடி
வேந்தன்பட்டை - அரசன்பட்டை
வேந்தன்மரம் - அரசமரம்
வேந்திசமிளகு - வெண்மிளகு
வேப்பமரம் - நிம்பமரம்
வேப்பம்பாசி - நிம்பப்பாசி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal