சித்த வைத்திய அகராதி 12101 - 12150 மூலிகைச் சரக்குகள்
வடம் - இணங்கன், வெடியுப்பு
வடுகன் - வயிரவன்
வட்டக்கிலுகிலுப்பை - மஞ்சட்கிலுகிலுப்பைச் செடி
வட்டக்கிளாச்செடி - களாச்செடி
வட்டக்குளம்படி - கழுதைக்குளம்படிக் கொடி
வட்டக்குளிகச்செடி - மேகநிறச்செவ்வந்திக் கொடி
வட்டத்தகரை - தகரைச்செடி
வட்டத்தாமரை - செந்தாமரை
வட்டதிருப்பிச்செடி -ஆடுதின்னாப்பாபளை
வட்டத்துத்தி - சிறுதுத்தி
வட்டநரிமிரட்டி - வட்டக்கிலுகிலுப்பை
வட்டவழுக்கை மரம் - வழுக்கைமரம்
வட்டுமுள்ளிக்கீரை - கறிமுள்ளிக்கீரை
வண்டர் - துருசு
வண்டலக்கீரை - வள்ளைக்கீரை
வண்டாழைமரம் - இலைத்தாழை மரம்
வண்டிகிக் கொட்டை - முந்திரிக்கொட்டை
வண்டிரச்செடி - பேராமுட்டிச்செடி
வண்டிரம் - வாகைமேற்புல்லூரி
வண்டில் -வெங்காரம்
வண்டுகொல்லிப்பாளை - ஆடுதின்னாப்பாளைக் கொடி
வண்டுகொல்லிமரம் - செண்பகமரம்
வண்டுணாமரம் - வேங்கைமரம்
வண்டுணிக்கொடி - தாமரைக்கொடி
வண்டுளச்செடி - நந்தியாவட்டைச் செடி
வண்ணானவுரி - நிலவுரிச்செடி
வண்ணானழுக்கு - சூதகம்
வதனாகப்பூச்செடி - வாடாமல்லிகைச் செடி
வதுவடிமரம் - பாலைமரம்
வதுவைக்கண்ணிச்செடி - பெரியாணங்கைச் செடி
வத்தகமரம் - வெட்பாலைமரம்
வத்தகிமுள்ளிச்செடி - காட்டுமுள்ளிச்செடி
வத்தமச்செடி - ஆமணக்குச்செடி
வத்திநயினி - மயக்கம்
வத்திரதாறுச்செடி - செம்புளிச்சைச் செடி
வத்திரபஞ்சகச்செடி - சிவகரந்தைச் செடி
வத்திரோணமரம் - பெருமரம்
வஸ்து - மதுபானம்
வஸ்துநீர் - சூதகநீர்
வந்துலப்பாளைக் கொடி - பங்கம்பாளைக் கொடி
வந்தூலச்செடி - வெள்ளுமத்தைச் செடி
வயகாண்டகச்செடி - கவிழ்தும்பைச்செடி
வயக்கேதனச்செடி - கானல்மிளகாய்ச்செடி
வயதரக்காய் - கடுக்காய்
வயந்தியச்செடி - குத்துப்பிடாரிச்செடி
வயலிகாப்பூண்டு - கோனியப்பூண்டு
வயலிக்கிழங்கு - முள்ளங்கிக் கிழங்கு
வயல்நெட்டிச்செடி - நீர்நெட்டிச்செடி
வயல்வேளைச்செடி - வயலிச்செடி
வயவாசச்செடி - கொழுஞ்சிசெடி
சித்த வைத்திய அகராதி 12101 - 12150 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal