சித்த வைத்திய அகராதி 12251 - 12300 மூலிகைச் சரக்குகள்
வறதாருக்கீரை - கறிமுள்ளிக்கீரை
வறப்பீகச்செடி - மிளகாய்நங்கைச்செடி
வற்கமாருதச்செடி - நாயுருவிச்செடி
வற்கலப்பட்டை - மரவுரிப்பட்டை
வற்குசாவரிசி - கார்போகவரிசி
வனசகதலிமரம் - காட்டுவாழைமரம்
வனசக்கொடி - தாமரைக்கொடி
வனசத்துளசி - முட்துளசி
வனசமூலிவிதை - நாயுருவி விதை
வனசரஞ்சனி - ஸ்தன்னயம்
வனசவாரி - தனம்
வனசீவிமரம் - வன்னிமரம்
வனசோபனக்கொடி - தாமரைக்கொடி
வனதீபம் - சோதிவிருட்சம்
வனத்துமுட்டை - காட்டெருமுட்கை
வனத்தெருவு - காட்டெருவு
வனத்தேரிச்செடி - ஆவாஞ்செடி
வனநங்கை - மலைநங்கைச்செடி
வனப்பிச்சிச்செடி - தகரைச்செடி
வனப்பிரமி - பெரும்பிரமிச்செடி
வனமஞ்சரிக்கொடி - கோழியவரைக்கொடி
வனமல்லிகை - காட்டுமல்லிகைக் கொடி
வனமாகியமூலி - ஆவரஞ்செடி
வனமாசச்செடி - கொடுவேலிச்செடி
வனமாசிகக்கீரை - முள்ளிக்கீரைச் செடி
வனமாலிச்செடி - பிரமிச்செடி
வனமாலைச்செடி - மருளுமத்தைச் செடி
வனமிகுத்திரிச்செடி - காயாங்குலைச் செடி
வனமிகுந்தமூலிச்செடி - ஆவாரைச்செடி
வனமிரட்டிக் கொடி - மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி - மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி - மலைமுசுட்டைக்கொடி
வனமூலிகை - ஆவாரைச்செடி
வனலட்சுமிமரம் - வாழைமரம்
வனவிசம் - சந்தனம்
வன்னி - லிங்கம், நெருப்பு
வன்னிகாவாகை - வன்னிவாகை
வன்னிகைக்கொடி - பொடுதலைக் கொடி
வன்னிக்காசிகச்செடி - முள்ளுக்கத்திரிச் செடி
வன்னிக்காரச்செடி - அக்கிராகாரச்செடி
வன்னிக்கீரைச்செடி - முள்ளிக்கீரைச்செடி
வன்னித்தீ - நவச்சாரம்
வன்னித்துடரிச்செடி - முன்றுடரிச்செடி
வன்னித்தும்பை - பெருந்தும்பைச்செடி
வன்னிப்பிரியச்செடி - கொடுவேலிச்செடி
வன்னிமரம் - வனசீவிகமரம்
வன்னிமுருங்கைமரம் - முள்முருங்கைமரம்
வன்னியாமச்செடி - நத்தைச்செடி
வன்னியின் கற்பம் - இலிங்க பாஷாணம்
வன்னிவாகைமரம் - கருவாகைமரம்
சித்த வைத்திய அகராதி 12251 - 12300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal