சித்த வைத்திய தொகையகராதி 351 - 400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 351 - 400 மூலிகைச் சரக்குகள்


உருக்குஞ்சரக்குகளுக்குச் சத்துரு

அயம் உருக்குகையில்

வைக்கிராந்தம்
கோழிக்கெந்தி
அஞ்சனப்பாஷாணம்
இணங்கன்
சுரைக்காய்க் கெந்தி
குதிரைப்பற் பாஷாணம்       ஆக 14

இந்தச் சரக்குகளிற் செந்தூரங்கள் செய்து அயம் உருக்குகையிற் கொடுத்தாற் கரியாய்க்கெட்டுப் போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

கருநாகம் உருக்குகையில்

நிமிளை
மனோசிலை
கெந்தி
அபிரேகம்
கயரிப்பாஷாணம்
அஞ்சனப்பாஷாணம்
கெளரிப்பாஷாணம்
வெள்ளி             ஆக 8

இந்தச்சரக்குகளிற் செந்தூஙைகள்செய்து கருநாகம் உருக்குகையிற் கொடுத்தாற் கருகிகெட்டுப்போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

செம்பு உருக்குகையில்


கருநாகம்
நிமிளை
சிங்கி
வங்கம்
வெள்ளைப்பாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
கெளரிப்பாஷாணம்
பூமாது
பஞ்சபட்சி
அஞ்சனக்கற்பாஷாணம்
கெந்தி             ஆக 11

இந்தச்சரக்குகளிற் செந்தூரங்கள் செய்து செம்பிற்கொடுத்தால் கெட்டுப்போகும். வெண்காரம் பித்தளை துத்தம் சரக்குகளுமுருக்குகையில் கருநாகத்திற்குச் சொன்ன சரக்குகளாற் களங்கு செந்தூரங்கள் செய்து கொடுத்தாற் கருகிக்கெட்டுப்போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

வெள்ளி உருக்குகையில்

வெள்ளீயம்
நாகம்
நிமிளை
காந்தம்
தீமுருகற்பாஷாணம்
கபரிப்பாஷாணம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
கம்பியுப்பு
சீனம்
சாரம்
குதிரைப்பற்பாஷாணம்
பவழப்புத்து

படிகாரம்
இந்துப்பு
கல்லுப்பு   
வெண்காரம்
லிங்கம்
வீரம்             ஆக 6

இச்சரக்குகள் எவைக்குஞ் சத்துருமித்துருக் களல்லாவாம்.

உருக்குஞ் சரக்குகளுக்கு மித்துரு


வெண்காரம்
காரசாரம்
சூடன்
படிகாரம்
குன்றி
வெண்கருவு
சாரம்

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal