சித்த வைத்திய அகராதி 10901 - 10950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10901 - 10950 மூலிகைச் சரக்குகள்


மடையன்நீர் - சுத்தகங்கைநீர்
மட்டம் - நாலுமாற்றுப் பொன்
மட்டிகேயமரம் - விளாத்திமரம்
மட்டிச்சாம்பிராணி - வகுளிச்சாம்பிராணி
மட்டித்தேயமரம் - வெண்கருங்காலிமரம்
மட்டிப்பால - வாசனைப்பால்
மட்டுகாத்தண்டு - வெண்கீரைத்தண்டுச் செடி
மணக்கேரலமரம் - வாழைமரம்
மணங்குச்செடி - இருவாட்சிச் செடி
மணத்தக்காளி - மணித்தக்காளிச்செடி
மணமாலிக் கொழுந்து - மரிக்கொழுந்து
மணலிக்கீரை - அயினிக்கீரை
மணலிக்கோரை - உப்பங்கோரைப்புல்
மணலிச்சசெடி - மருக்கொழுந்துச்செடி
மணல்நீர் - கங்கைநீர்
மணற்சீனி - அஷ்டகிராம்சீனி
மணிக்காம்புச்செடி - தக்காளிச்செடி
மணிக்கொடி - உத்தரமணிக்கொடி, நஞ்சுக்கொடி
மணிச்சித்திரச்செடி - பொற்றலைக் கரிப்பான்செடி
மணிப்பிரண்டைச்செடி - கரணைப்பிரண்டைச்செடி
மணிப்புங்குமரம் - நெய்க்கொட்டான்மரம்
மணிமாமரப்பழம் - மாம்பழம்
மணிமுத்துவேங்கை - வச்சிரவேங்கைமரம்
மணிமூலிக்கொடி - உத்தாமணிக்கொடி
மணியாட்டங்கொடி - வனமிரட்டிக்கொடி
மணியாத்தி - காட்டாத்திமரம்
மணியாமணக்குச்செடி - ஆமணக்குச்செடி
மணிலாக்கடலை - வேர்க்கடலை
மணிவீசிரமரம் - மாதளைமரம்
மணீசகச்செடி - சந்திரகாந்தி
மண்சாடிக்குண்டுமணி - பெருங்குண்டுமணி
மண்சிலை - மருந்துமேற்கவஞ்செய்யும் மண்துணி
மண்டகிச்செடி - ஆமணக்குச்செடி
மண்டலம் - நாற்பத்தெட்டுநாள்
மண்டலாட்டிரச்செடி - காட்டிலுப்பைச்செடி
மண்டலாதிகக்காய் - மாங்காய்
மண்டலிச்செடி - அழுகண்ணிச்செடி
மண்டிதக்கீரை - சிறுகீரை
மண்ணரசுமரம் - பூவரசுமரம்
மண்ணிலவேந்தனிலை - வெற்றிலை
மண்ணிலவேந்தன்பழம் - எலுமிச்சம்பழம்
மண்ணிலவேந்தன்மரம் - அரசமரம்
மண்ணுருவித் தயிலம் - குழித்தைலம்
மண்ணைகட்டிச்செடி - அதிங்குச்செடி
மண்ணைப்பூடு - வெங்காயப்பூடு
மண்ணையரிசி - வாலுளுவையரிசி
மண்ணோகதப்பூடு - ஒருதலைவெள்ளைப்பூடு
மண்மலிக்கொழுந்து - மருக்கொழுந்துச்செடி
மதகசாம்பிராணி - பரங்கிச்சாம்பிராணி
மதகரித் திப்பிலி - யானைத்திப்பிலி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal