சித்த வைத்திய அகராதி 12001 - 12050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12001 - 12050 மூலிகைச் சரக்குகள்


லாசகப்பயறு - பனிப்பயறு
லாடன்பருத்தி - இலண்டன் பருத்திச்செடி
லிக்கோகொட்டை - நேர்வாளக்கொட்டை
லிங்கச்சூதம் - லிங்கரசம்
லிங்கபாஷாணம் - வன்னிகற்பாஷாணம்
லீப்பாசிதச்செடி - வெள்ளருக்குச் செடி
லீப்பாவிரை - காக்கைகொல்லிவிரை
லுக்காவிரை - பேதானாவிரை
லுக்கோசூரை - கருஞ்சூரைசெடி
லூச்சிகாப்புல் - சோனைப்புல்
லூச்சிப்பிசின்மரம் - குங்கிலிய மரம்
லெட்சுமிமரம் - சித்தாமரம்
லெட்சுமிக்கொடி - தாளிக்கொடி
லெந்துப்பு - கல்லுப்பு
லெப்பு - கங்கையுப்பு
லேச்சுகாச் செடி - மணத்தக்காளிச் செடி
லேவுந்துக்கோரை - உப்பங்கோரை
லைலித்தும்பை - பெருந்தும்பைச்செடி
லைலுப்பாலை - வெப்பாலைமரம்
லொக்கிகாச்செடி - நாயுருவிசெடி
லொத்தான்கொடி - முடக்கொத்தான்கொடி
லோசினம் - கண், நேத்திரம்
லோத்திரக் கிழங்கு - கொட்டிக்கிழங்கு
லோலேகக்கீரை - சாணாக்கீரை
லேளகிகமரம் - சந்தனமரம்
வுசத்திராமரம் - வாகைமரம்
வகாரவுப்பு - கல்லுப்பு, கஞ்சியுப்பு, குடத்துநீருப்பு
வகுட்பச்சை - சமுத்திராப்பச்சை
வகுண்டச்செடி - கவிழ்தும்பைச்செடி
வகுண்டாசிகச்செடி - மலைப்புகையிலைச்செடி
வகுண்டிகைக்கோரை - கஞ்சாங்கோரை
வகுண்டிகாவரிசி - வாலுளுவையரிசி
வகுத்தாலப்பாசி - கொடிப்பாசி
வகுழம்பூ - மகிழம்பூமரம்
வகுளப்பச்சை - சமுத்திராப்பச்சை
வகுளிச்சாரம் - எவாச்சாரம்
வகுளிமாமரம் - மலைமாமரம்
வக்கணத்திமரம் - மாகணத்திமரம்
வக்கிரபுட்பம் - முருங்கைப்பூ
வங்கச்செடி - இண்டஞ்செடி
வங்கணப்பட்டை - செங்கத தாரிப்பட்டை
லவங்கம் - வெள்ளீயம்
வங்கம்நீத்திமரம் - மலை முருங்கை மரம்
வங்கராஜன் - ஈயம்
வங்கனிப்பட்டை - செங் கத்தாரிப்பட்டை
வங்காரவல்லைக்கொடி - வல்லைக்கொடி
வங்கினி - மை - திலகம் - பொட்ட
வங்குசநீர் - கூகைநீர்
வசகச்செடி - கொடுவேலிச்செடி
வசநாவிக்கிழங்கு - நஞ்சுக்கிழங்கு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal