சித்த வைத்திய அகராதி 10851 - 10900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10851 - 10900 மூலிகைச் சரக்குகள்


மஞ்சட்சேவிதச்சோளம் - சீதகச்சோளம்
மஞ்சட்தாரைமரம் - மந்தாரை மரம்
மஞ்சட்தாழை - பொன்தாழை மரம்
மஞ்சட்தினை - தினை
மஞ்சட்தெங்குநீர் - கௌளிபாத்திரத் தென்னையிளநீர்
மஞ்சட்தென்னை - நக்குவாரித் தென்னை
மஞ்சட்தேமாமரம் - ஒட்டுமாமரம்
மஞ்சணத்திமரம் - நுணாமரம்
மஞ்சணாதிச்செடி - மகாமேதைச்செடி
மஞ்சணிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
மஞ்சதிச்செடி - கையான்தகரைச் செடி
மஞ்சரக்கள்ளி - இலைக்கள்ளி
மஞ்சராக்காளிச் செடி - மணத்தக்காளிச்செடி
மஞ்சரிச்செடி - நாயுருவிச்செடி
மஞ்சலிப்பச்சை - உருத்திரசடைச்செடி
மஞ்சளந்தி மல்லிகை - பொன்னந்திமல்லிகை
மஞ்சளாரளிமரம் - மலையாளிமரம்
மஞ்சளலரி - பொன்னலரி மரம்
மஞ்சளாவரை - ஆவரைச் செடி
மஞ்சளாவாரை - ஆவரஞ்செடி
மஞ்சளிளநீர்த்தென்னை - நக்குவாரித் தென்னை
மஞ்சளிளவஞ்சிமரம் - மயில்வஞ்சிமரம்
மஞ்சள் - விரலிமஞ்சள்
மஞ்சள்வீரிக்கீரை - மணலிக்கீரை
மஞ்சள்வெற்றிலை - பொன்னிறவெற்றிலை
மஞ்சனிக்கொடி - வேலிப்பருத்திக் கொடி
மஞ்சாரிக்கோரை - கஞ்சாங்கோரை
மஞ்சாரூகமரம் - நுணாமரம்
மஞ்சிகக்கொடி - காளிக்கொடி
மஞ்சிகவரிசி - பச்சரிசி
மஞ்சிநாக்கொன்னை - மயிற்கொன்னைமரம்
மஞ்சிகைச்செடி - கையாந்தகரைச் செடி
மஞ்சிஷ்டி - மருஞ்சிட்டம்
மஞ்சிடாலிகமரம் - மலைநொச்சிமரம்
மஞ்சிட்டம் - மஞ்சிஷ்டி
மஞ்சிபலைமரம் - வாழைமரம்
மஞ்சிறாச்செடி - கையாந்தகரைச்செடி
மஞ்சினிக்கிழங்கு - புளிநறளைக்கிழங்கு
மஞ்சினியரிசி - புழங்கலரிசி
மஞ்சூரஞ்செடி - கருஞ்சூரஞ்செடி
மஞ்சையீர்க்கு - மயிலிறகு
மடல்திருப்பிச்செடி - வட்டத்திருப்பிச்செடி
மடல்நோக்கிச் செடி - நோக்குநோக்கிச்செடி
மடவரக்குறிஞ்சி - வாடாக்குறிஞ்சிச்செடி
மடவைமயக்கிச்செடி - கன்னிமயக்கிச் செடி
மடவைமரம் - தணக்குமரம்
மடற்பனை - கங்குப்பனைமரம்
மடிகமரம் - தாழைமரம்
மடிக்கதமரம் - மலைப்பூவரசுமரம்
மடையன் - துருசு, துத்தம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal