சித்த வைத்திய அகராதி 12151 - 12200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12151 - 12200 மூலிகைச் சரக்குகள்


வயளைக்கொடி - பசளைக்கொடி
வயற்கோவிமரம் - வெண் தேக்குமரம்
வயாதிகக்கொடி - சீந்திற்கொடி
வயிகாப்பிசின் - வெளிச்சிப் பிசின்
வயிரகாணிக்கொடி - பெருநெருஞ்சிக்கொடி
வயிரப்பண்ணாடை - பனைமரப்பண்ணாடை
வயிரவல்லிக்கொடி - பிரண்டைக் கொடி
வயிரவளைப்பயறு - நரிப்பயற
வயிரவாரினிக்கீரை - சிறுகீரை
வயிரவிச்சாணை - சத்திச்சாரணை
வயிரவேர் - சாயவேர்
வயிலத்தி - உள்ளங்கை
வயிலத்திருகி - உள்ளங்கை
வயேகடமஞ்சள் - மரமஞ்சள்
வரகரிசி - புனலரிசி
வரப்புக்கிடா - நண்டு
வாற்சுண்டி - நெட்டிக்கொடி
வாற்சூரிச்செடி - நத்தைச்சூரிச்செடி
வாற்பூலா - நீர்ப்பூலா
வாற்பூலிகாச்செடி - முள்ளிச் செடி
வாரகபுடம் - ஐம்பதெருக்கொண்டபன்றிப்புடம்
வராகரக்கிழங்கு - அமுக்கிராக்கிழங்கு
வராகரப்பூடு - கூத்தன்குதம்பைச் செடி
வராகிச்சாரணை - சத்திச்சாரணைக்கொடி
வராகியரத்தை - சிற்றரத்தை
வராடிகக்காய் - வெண்மிளகாய்
வராலிகம் - ஈரல்
வராளியிலைச்செடி - விராலியிலைச் செடி
வரானிகமரம் - பனைமரம்
வரிகாரம் - பொரிகாரம்
வரிக்கடுக்காய் - மஞ்சட்கடுக்காய்
வரிக்கற்றாழை - குரவரிக்கற்றாழை
வரிக்கன்னிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
வரிக்காளான் - காளான்
வரிக்கிரிசமரம் - முள்ளிலவமரம்
வரிக்குமிட்டி - பேய்க்குமுட்டிக் கொடி
வரிக்கோரை - பாய்க்கோரை
வரிநகக்கொன்னை - புலிநகக்கொன்னைமரம்
வரிப்பச்சை - நாகப்பச்சை
வரிப்பிரோதிதம் - சதகுப்பை
வரிப்பீகிக்குமுட்டி - பேய்க்குமுட்டிக்கொடி
வரிப்பீர்க்கு - பீர்க்குக்கொடி
வரியரிசி - சீரகம்
வரிவழிக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
வரிவழுக்கமரம் - வழுக்கைமரம்
வரிவளிக்கற்றாழை - குமரிக்கற்றாழை
வரிவளிளிக்கொடி - வெற்றிலைவள்ளிக்கொடி
வரிவனவிருட்சம் - தில்லைவிருட்சம்
வரியமரம் - பெருஞ்சூலிமரம்
வருக்கைமரம் - பலாமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal