சித்த வைத்திய அகராதி 11701 - 11750 மூலிகைச் சரக்குகள்
மூதிகாவேம்புச்செடி - சிவனார்வேம்புச்செடி
மூதிதமரம் - எருக்கிலைமரம்
மூதிரக்கொடி - அவரைக்கொடி
மூதிராவிருட்சம் - எருமைவிருட்சம்
மூதைக்காலிச் செடி - இசங்குச்செடி
மூதைவியச்செடி - பெரியாணங்கைச்செடி
மூலகந்தச்செடி - இருவேலிச்செடி
மூலகபமரம் - முருங்கைமரம்
மூலகாச்செடி - முள்ளங்கிச்செடி
மூலக்கரணிப்பாஷாணம் - கற்கடகபாஷாணம்
மூலக்கொடி - சல்லிக்கொடி
மூலவல்லியிலை - வெற்றிலை
மூலவெளிரசம் - மூளை
மூவிக்குடல் - மணிக்குடல்
மூவிருந்தேக்கி - தொப்புள்
மூவிலைக்குருந்து - குருந்தமரம்
மூவிலைப்பயறு - நரிப்பயறு
மூவிலைப்புள்ளடி - சிறுபுள்ளடி
மூவிலைப்புன்னைமரம் - புன்னைமரம்
மூவிலைமின்னிக்கொடி - அவரைக்கொடி
மூவிலைமுன்னை - சிறுமுன்னை
மூவுதவமணிக்கொடி - யானைக்குன்றிமணிச் செடி
மூறுவக் குரும்பை - பெருங்குரும்பை
மூன்றிலைமேனிச்செடி - குப்பைமேனிச்செடி
மூன்றுகூட்டுநெய் - முக்கூட்டுநெய்
மூன்றுப்பு - அகார, உகார, மகார வுப்பு
மெதுமிளகாய்ச் செடி - குடமிளகாய்ச்செடி
மெதுவாசக்கிழங்கு - கொட்டிக்கிழங்கு
மெதுவுசுரைக்கொடி - கும்பச்சுரைக் கொடி
மெத்தப்பிரமி - வாய்நீர்
மெய்யான்சாரி - ஊன்
மெய்யுதகநீர் - சிறுநீர்
மெருகன்கிழங்கு - வெருகன்கிழங்கு
மெருகிக் கற்றாழை - மருட்கற்றாழை
மெலாம்பழம் - மொலாம்பழம்
மெலிகாவிகம் - மருது மேற்புல்லுருவி
மெல்லியகொத்தான்கொடி - முடக்கொத்தான்கொடி
மெல்லியகோசு - முட்டைக்கோசு
மெல்லியசாகிகமரம் - மராமரம்
மெல்லியபூச்செடி - மல்லிகைப்பூச்செடி
மெல்லியல்மரம் - மலைவாழை மரம்
மெல்லிலை - வெற்றிலை
மெழுகாலிகமரம் - மாங்கிளுவைமரம்
மெழுகு - தேன்மெழுகு
மெழுகுதேன் - கொம்புத்தேன்
மெழுகுபீர்க்கு - வெண் பீர்க்குக்கொடி
மெழுகுபூவிகம் - தேன் கூட்டுக்குள்ளிருக்கும் பூச்சிகள்
மெழுகு பேய்ப்பீர்க்குக் கொடி - கசப்புபேய்ப்பீர்க்கு
மெழுகுவல்லிக்கொடி - வட்டவல்லிக்கொடி
மேகக்காய் - கடுக்காய்
சித்த வைத்திய அகராதி 11701 - 11750 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal