சித்த வைத்திய அகராதி 11551 - 11600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11551 - 11600 மூலிகைச் சரக்குகள்


முட்டுக்கோலகப்பூண்டு - குருவிச்சிப்பூண்டு
முட்டை - எருமுட்டை
முட்டைக்காளான் - குடைக்கானான்
முட்டைக்கோசு - அண்டக்கோசு
முட்டைநீர் - அண்டநீர்
முட்பலா - வேர்ப்பலா
முட்பலாசுமரம் - இலைப்புரசுமரம்
முண்டகக்கொடி - தாமரைகொடி
முண்டகநாயகச்செடி - சூரியகாந்திச்செடி
முண்டக விருட்சம் - முண்டினிவிருட்சம்
முண்டகவேணிச்செடி - பொன்னாவரைச்செடி
முண்டகாக்கினிக் கொடி - கருங்காக்கணான்கொடி
முதற்பேறு - தலைப்பிள்ளை
முதியச்செடி - நாய்வேளைச்செடி
முதியாக்கிழங்கு - மஞ்சட்கிழங்கு
முதியாரிகம் - மஞ்சள்
முதியார்கூந்தற்கொடி - சவுரிக்கொடி
முதியோர்மேதை - மகாமேதை
முதிரச்செடி - மேகசஞ்சீவிச்செடி
முதிராச்செவ்வந்தி - மஞ்சட்செவ்வந்திச் செடி
முதிரிக்கொடி - அவரைக்கொடி
முதிரைக்காலிமரம் - மந்தாரைமரம்
முதிரைச்செடி - துவரைச்செடி
முதிர்கசப்புச்செடி - பேய்த்தும்பைச் செடி
முத்தகமரம் - சுருக்குவாளிமரம்
முத்தக்காசு - கோரைக்கிழங்கு
முத்தலைசத்திச் செடி - செருப்படைக்கொடி
முத்தாகாரம் - முத்துச்சிப்பி
முத்தாபலச்செடி - இசங்குச்செடி
முத்தாமணக்கு - கொட்டையாமணக்கு
முத்திருக்கஞ்செவி - சின்னவெழுத்தாணிப் பூண்டு
முத்திரைவித்து - உருத்திராட்சக்காய்
முத்தீ - தீபாக்கினி, சுமலாக்கினி, காடாக்கினி.
முத்துகச்செடி - கடலைச்செடி
முத்துச்சோளம் - வெண்முத்துச்சோளத் தட்டை
முத்துமுல்லைச் செடி - தௌதிகமுல்லைச் செடி
முத்தெண்ணெய் - விளக்கெண்ணெய்
முத்தெருக்கன்செவி - முத்திருக்கன்செவி
முந்திரிக்கொடி - திராட்சைக்கொடி
முந்திரிக்கொட்டை - கொட்டைமுந்திரிமரம்
முந்திரிப்பருப்பு - மரமுந்திரிப்பருப்பு
முந்திரிப்பழம் - கிஸ்மிஸ்பழம்
முந்திரிமரம் - கொட்டைமுந்திரி
முந்துந்துக்கொடி - முதியார்கூந்தற்கொடி
முந்தூழகமரம் - மூங்கில்மரம்
முந்தூள்மரம் - மூங்கில்மரம்
முப்பட்டைக்கள்ளி - பொத்தைக்கள்ளி
முப்பத்திராய்ப்பூண்டு - மயிற்காலடிப்பூண்டு
முப்பத்திரி - மூன்றுபத்தரி
முப்பந்தினிமரம் - காட்டுமாமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal