சித்த வைத்திய அகராதி 12301 - 12350 மூலிகைச் சரக்குகள்
வன்னிவிருட்சம் - சுடர்விருட்சம்
வாகவிக்கீரை - செங்கீரை
வாகனாசிப்பயறு - பனிப்பயற
வாகினிமரம் - பாதிரிமரம்
வாகினிமுந்திரி - கொடிமுந்திரி
வாகுசக்கீரை - குப்பைக்கீரை
வாகுனிக்காரை - பெருங்காரை மரம்
வாகுனிச்செடி - கீழ்காய்நெல்லி
வாகைச்செடி - நிலவாகைச்செடி
வாகைமரம் - பெருவாகைமரம்
வாகைமேற்புல்லுருவி - வாகுமேற்புல்லுருவி
வாசந்திக்கொடி - குருக்கத்திக்கொடி
வாசந்திரமல்லி - கொத்தமல்லிச்செடி
வாசப்பச்சை - மாசிப்பச்சை
வாசவுப்பு - கல்லுப்பு
வாசனைப்புல் - தரகம்புல்
வாசனைப்பூலிகம் - சந்தன அத்தர்
வாசனைமரம் - சந்தனமரம்
வாசனைமருவி - புனுகு, புழுகு
வாசனைமல்லிகை - சாதி மல்லிகைச்செடி
வாசனையலரி - கஸ்தூர்யரளிச்செடி
வாசனைவெற்றிலை - கற்பூர வெற்றிலை
வாசனைவேதிகம் - கிராம்பு
வாசனைவேர் - விலாமிச்சைவேர்
வாசாங்கச் சாரணை - மூக்கரைச்சாரணைக் கொடி
வாசாங்கியம் - மிளக
வாசாணிமூலி - செவ்வாமணக்குச்செடி
வாசாதிச்செடி - ஆடாதோடைச்செடி
வாசித்தண்டு - ஆண்குறி
வாசிநீர் - ஆகாயநீர்
வாசுகி - நாகம்
வாடாப்பூ - தென்னம்பூ, கொய்யாதபூ, பனம்பூ
வாடாமல்லிகை - சிவப்புவாடா மல்லிகைச்செடி
வாணகத்திமரம் - அரசமரம்
வாணிமலர் - வெண்டாமரைமலர்
வாதகிச்செடி - ஆடாதோடைச்செடி
வாதசிரோமண் - நவச்சாரம்
வாதநாசனி - கொடிக்கள்ளி
வாதபோதமரம் - பலாசுமரம்
வாதமக்கிச்செடி - மேகசஞ்சீவிச்செடி
வாதமடக்கி - தழுதாழை
வாதமண்டிகச்செடி - வாதமடக்கிச்செடி
வாதமரம் - வில்வமரம்
வாதமையுப்பு - கரியுப்பு
வாதரக்காட்சி - அம்பலக்காட்சிமரம்
வாதரங்கம் - தேன்
வாதரங்கிகமரம் - அரசமரம்
வாதiவரிச்செடி - ஆமணக்குச்செடி
வாதாங்கொட்டை மரம் - வாதுமைமரம்
வாதாசணிப்பூடு - கீரிப்பூடு
சித்த வைத்திய அகராதி 12301 - 12350 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal