சித்த வைத்திய அகராதி 12501 - 12550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12501 - 12550 மூலிகைச் சரக்குகள்


விஷ்ணுவேதைச்செடி - கருந்துளசிச் செடி
விடைதாரிகச்செடி - யானைமயக்கிச் செடி
விடையம் - அதிவிடையம்
விடையூர்திச்செடி - சிவகரந்தைச் செடி
விட்டரிமரம் - அகத்திமரம்
விட்டிகாப்பருத்தி - லண்டன்பருத்திச் செடி
விட்டிலாமரம் - பிராமரம்
விட்டுணுப்பிரியச் செடி - துளசிச்செடி
விண்ணாகிப்புல் - காவட்டம்புல்
விண்ணாங்குமரம் - நாங்கில்மரம்
விண்ணாரகமரம் - மாதளைமரம்
விண்ணாரிகக் கொடி - அப்பைக்கோவைக்கொடி
விண்ணாரோகணி - கடுகுரோகணி
விண்ணுகக்கீரை - கறிமுள்ளிக்கீரை
விண்பகசகத்தி - சிவப்பகத்திமரம்
விண்பரிமரம் - மூங்கில்மரம்
விண்மணிச்செடி - சூரியகாந்திச்செடி
விதாரிகச்செடி - புன்முருக்குச்செடி
விதாருகக்கிழங்கு - கருணைக்கிழங்கு
விதிபிறந்தமதி - நரபிக்கொடி
விதிபிறந்த விடையம் - யானைக்கொம்பனதி விடையம்
விதுகங்காய் - மிதுக்கங்காய்
விதைகாலிகச்செடி - வட்டக்கிலுகிலுப்பைச்செடி
விதையத்திப்பழம் - சீமையத்திப்பழம்
வித்திகப்பூ - இந்துப்பூ
வித்தியமரம் - தான்றிமரம்
வித்திரகச்செடி - வெள்ளெருக்குச் செடி
வித்திராசிதக்கொடி - வள்ளைக்கொடி
வித்துகநீர் - கங்கைநீர்
வித்துசக்கொடி - தாளிக்கொடி
விஸ்வாமித்திரன்புல் - தருப்பைப்புல்
விநாயகர் கைப்பிடி - யானைக்கொம்பு
விந்தவாஷாணம் - குதிரைப்பற்வாஷாணம்
விந்தியவசனி - கோஷ்டம்
விந்துகவுளிச்செடி - சடைச்சிச்செடி
விந்தூகம் - சாதிலிங்கம்
விந்தையப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
விபணச்செடி - அச்சஞ்செடி
விபத்தமரம் - காஞ்சிரைமரம்
விபனப்பூடு - பாம்பு கொல்லிப்பூடு, கீரிப்பூடு
விபீதமரம் - தான்றிமரம்
விபுதகவஞ்சிக்கொடி - வஞ்சிக்கொடி
விபுதகந்தச்செடி - நெய்ச்சிட்டிச் செடி
விப்புருதிக்கிழங்கு - பல பிள்ளைக்கிழங்க
விப்புருதிநாயகச்செடி - அமுக்கிராச்செடி
விமலோதயச் செடி - வெந்தயச்செடி
விம்பகக்கொடி - கோவைக்கொடி
விம்படச்செடி - கடுகுச்செடி
வியல்கனாகம் - திப்பிலி
வியல்காதிகமரம் - வஞ்சிமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal