சித்த வைத்திய அகராதி 10001 - 10050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10001 - 10050 மூலிகைச் சரக்குகள்


புட்கரக்கொடி - தாமரைக்கொடி
புட்கரமரம் - குடைவேலாமரம்
புட்டரிசி - அவியரிசி
புட்டிலவச்செடி - சிறுதும்பைச்செடி
புட்பகக்குறட்டை - முக்குறண்டிச் செடி
புட்பகம் - அன்னபேதி
புட்பகரிதமரம் - மூங்கில்மரம்
புட்பகாசீசம் - அன்னபேதி
புட்பகிக்கொட்டை - கொட்டைக்கரந்தை
புட்பகிமரம் - வாழைமரம்
புணைவிமரம் - மூங்கில்மரம்
புண்டரிகக்கொடி - தாமரைக்கொடி
புண்டரியக்கொடி - சாரணைக்கொடி
புண்ணிபகதீதம் - வெண்கரும்புத் தட்டை
புண்ணிபகந்தம் - சண்பகம்
புண்ணிபகாரம் - குங்கிலியம்
புண்ணிபவரசமரம் - விழுதரச மரம்
புதினாக்கீரை - பொதினாக்கீரை
புதுநிலநீர் - கங்கைநீர்
புத்தாஞ்சோறு - கரையான்புத்துச் சோறு
புத்தாத்திரி மரம் - அரிநெல்லி மரம்
புத்தாளிப்பனை - கல்லுப்பனை
புத்திகாமரம் - காஞ்சிரைமரம்
புத்தமிமரம் - வெள்ளையீருகொல்லிமரம்
புத்திரசீலி விதை - சந்தானசஞ்சீவி விதை
புத்திரசூலிகக் கிழங்கு - பிள்ளைத்தாச்சிக் கிழங்கு
புத்திரசென்னிக்கொடி - தாளிக்கொடி
புத்திரமஞ்சரிமரம் - தணக்குமரம்
புத்திரசாரிமரம் - காஞ்சிரைமரம்
புத்திரிகாச்செடி - தக்காளிச்செடி
புத்திரிச்செடி - கீழ்காய்நெல்லிச் செடி
புத்தீபக்கொடி - வட்டச்சாரணைக் கொடி
புத்துவணிமரம் - காஞ்சிரை மரம்
புத்தேளுகமரம் - தேவதாருமரம்
புத்தோடு - புதியவோடு
புயாசலம் - தோள்
புரசுமரம் - பலாசுமரம்
புராமுட்டிச்செடி - பிராப்பிரக்கிச் செடி
புராவணியச்செடி - பெரும்புள்ளடிச்செடி
புருடகிமரம் - புன்னைமரம்
புருடாதிகப்பழம் - பம்பளிகாசுப்பழம்
புருபீருகக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
புரூணகத்தி - சிசுவகை
புரூணகம் - கருப்பத்தின்பிள்ளை
புலவாகிதச்செடி - பூலாஞ்செடி
புலிதடுக்கிச்செடி - இண்டஞ்செடி
புலிதொடக்கிச்செடி - ஈயத்தண்டுச் செடி
புலிநகக்கொன்னை - மஞ்சட்கொன்னை
புலிபாசிதம் - செவ்வியம்
புலியாவிரைச்செடி - பொன்னாவிரைச் செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal