சித்த வைத்திய அகராதி 10301 - 10350 மூலிகைச் சரக்குகள்
பூறுகக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
பூனைக்காஞ்சொரி - பூனைக்காலிக்கொடி
பூனைக்காரிகப்புல் - பூனைப்புல்
பூனைக்காலி - பூனைக்காஞ்சொரிக் கொடி
பூனைப்பகைச் செடி - குப்பைமேனிச் செடி
பூனைப்பீஷன் - பூனையண்டக்கொடி
பூனைப்புலிமரம் - சுக்குநாறிமரம்
பூனைப்புல் - எலிப்புலிப்புல்
பூனைப்பூசிணிக்கொடி - வெள்ளைப் பூசணிக்கொடி
பூனைப்பூண்டு - எலிவிஷப்பூண்டு
பூனைப்பேரிகவிருட்சம் - சுணங்கவிருட்சம்
பூனைமுட்குறண்டிச்செடி - பூனைக்குறண்டிச்செடி
பூனைமூலிச்செடி - குப்பைமேனிச்செடி
பூனையண்டக்கொடி - பூனைப்பீஷன்கொடி
பூனையாதரப்புல் - பூனைப்புல்
பூனைவணங்கிச்செடி - குப்பைமேனிச் செடி
பூனையண்டக் கொடி - பூனைப்பீஷன்கொடி
பூனையாகாப்புல் - பூனைப்புல்
பூனைவணங்கிச் செடி - குப்பைமேனிச் செடி
பூனைவித்து - பூனைக்காலிவிரை
பெட்டிவெல்லம் - பனைவெல்லம்
பெட்டேகச்செடி - செந்தக்காளிச்செடி
பெண்டுகக்கொடி - கழற்சிக்கொடி
பெண்ணகச்செடி - நீர்முள்ளிச் செடி
பெண்ணமுதமூலி - கொட்டைக் கரந்தைச்செடி
பெண்ணரசுக்கொடி - அல்லிக்கொடி
பெண்ணழுக்கு - ருதநீரு
பெண்ணாகிசச் செடி - தக்காளிச்செடி
பெண்ணைமரம் - பனைமரம்
பெண்ணோட்டப்பயறு - நரிப்பயறு
பெண்துடரி - பின்துடரிச்செடி
பெண்நீர் - சிறுபெண்நீர், ருதுநீர்
பெண்பனைமரம் - காய்ப்பனைமரம்
பெண்பாகசமரம் - செம்மருதோன்றிமரம்
பெத்தணத்திச்செடி - பேதனத்திச்செடி
பெத்தமூலச்செடி - சிறுவழுதலைச் செடி
பெத்தற்குரும்பை - பெருங்குரும்பை
பெத்தனத்திச்செடி - பேதனத்திச்செடி
பெத்திகைக்கத்திரி - பெருமுள்ளிக் கத்திரி
பெந்திபேகச்செடி - சிறுநிலீசெடி
பெப்பர்மெண்டுச்செடி - சீனத்துச் செடி
பெயர்சொல்லாதது - வசம்பு
பெயர்த்தலக்கொடி - பாலாந்தெள்ளுக்கொடி
பெயாதனமரம் - வேங்கைமரம்
பெரிய அறுகு - யானை அறுகு
பெரியஆவிரை - ஆவரைச்செடி
பெரியஎழுத்தாணிப் பூண்டு - எழுத்தாணிப்பூண்டு
பெரியஏலம் - நாட்டேலம்
பெரியசாலிமரம் - சாலிமரம்
பெரியசிவப்பம்மான் பச்சரிசி - பெருஞ்சிவப்பம்மான் பச்சரிசி
சித்த வைத்திய அகராதி 10301 - 10350 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal