சித்த வைத்திய அகராதி 10351 - 10400 மூலிகைச் சரக்குகள்
பெரியநங்கைச்செடி - பிரியாநங்கைச்செடி
பெரியம்மான் பச்சரிசி - பெருஞ்சித்திரப்பாலாடைக்கொடி
பெரியவுரி - வண்ணானவுரி
பெரியாணங்கைநீர் - குடநீர், ருதுநீர், சிறுநீர்
பெரியாதளைச்செடி - காட்டாமணக்குச்செடி
பெரியாதீதக்கொடி - பெருமருந்துக்கொடி
பெரியநங்கை - மிளகாய்நங்கைச் செடி
பெரியானாதிக்காய் - தானிக்காய்
பெரியோருண்ணுங் கற்பம் - கஞ்சாயிலை
பெருக்கி - நாதம் - விந்து
பெருங்கடுக்காய் - கப்பற்கடுக்காய்
பெருங்கடிச்சித்தாழை - தழுதாழை
பெருங்கட்டுக்கொடி - நீர்க்கட்டுக்கொடி
பெருங்கத்தாரிப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
பெருங்கத்திரிக்காய் - பெரும்வழுதலைக்காய்
பெருங்கததுகப்புல் - தருப்பைப்புல்
பெருங்கரணைக்கிழங்கு - சேனைக் கிழங்கு
பெருங்களாமரம் - களாமரம்
பெருங்கற்றாதிமரம் - தாளிப்பனை
பெருங்கற்றாழை - கருங்கற்றாழை
பெருங்காகிரிக்கொடி - தாளிக்கொடி
பெருங்காகோளி - காகோளி
பெருங்காக்கணத்தி - காட்டுக்காக்கணத்தி
பெருங்காஞ்சொரி - பெருஞ் செந்தொட்டிச்செடி
பெருங்காமிகப் பத்திரி - தாளிசப்பத்திரி
பெருங்காயம் - பாற்காயம்
பெருங்காயம்நாறிமரம் - பெருங்காய்ப்பால் மரம்
பெருங்காரகப்பூடு - திகைப்பூடு
பெருங்காராமணி - பெரிய காராமணிப்பயறு
பெருங்காரைச்செடி - வனக்காரைச்செடி
பெரியாதீதக்கொடி - பெருமருந்துக்கொடி
பெரியநங்கை - மிளகாய்நங்கைச்செடி
பெரியானாதிக்காய் - தானிக்காய்
பெரியோருண்ணுங்கற்பம் - கஞ்சாயிலை
பெருக்கி - நாதம், விந்து
பெருங்காரைமரம் - மதுக்காரைமரம்
பெருங்காலிப்பூச்சி - திகைப்பூடுப்பூச்சி
பெருங்காளான் - காளான்
பெருங்கானச்செடி - பேய்த்தும்பைச்செடி
பெருங்கிழங்கு - பறங்கிக்கிழங்க
பெருங்கீரிப்பூண்டு - கீரிப்பூண்டு
பெருங்குமிழ்மரம் - குமிழ்மரம்
பெருங்குருக்கிழங்கு - மருட்கிழங்கு
பெருங்குரும்பை - மதுக்குரும்பை
பெருங்குலிகச்செடி - தகரைச்செடி
பெருங்குறட்டைக்கொடி - குறட்டைக்கொடி
பெருங்குறிஞ்சா - நறுங்குறிஞ்சாச்செடி
பெருங்குறுந்தொட்டி - செங்குறுந்தொட்டிச்செடி
பெருங்குறுந்தோதிகமரம் - குருந்தமரம்
பெருங்குன்றி மணி - யானைக்குன்றிமணி
சித்த வைத்திய அகராதி 10351 - 10400 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal