சித்த வைத்திய அகராதி 10251 - 10300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10251 - 10300 மூலிகைச் சரக்குகள்


பூபவாழைமரம் - பூவன் வாழைமரம்
பூப்பட்டை - இலவங்கப்பட்டை
பூப்பருதிமரம் - பூவரசுமரம்
பூப்புடம் - பூமிப்புடம்
பூமலி - மூளை - மண்டைமூளை
பூமாங்கிச்செடி - சங்கங் குப்பிச்செடி
பூமாரிமரம் - வேப்பமரம்
பூமிச்சருக்கரைக் கிழங்கு - காட்டுச்சருக்கரைக் கிழங்கு
பூமிநாதம் - இந்துப்பூ - பூநீர்
பூமிநாயகச்செடி - நிலவேம்புச்செடி
பூமிநாயகம் - நாக்குப்பூச்சி
பூமிநிம்பச்செடி - நிலவேம்புச்செடி
பூமிபுரண்டி - நிலம்புரண்டிச்செடி
பூமிப்பனை - நிலப்பனை
பூம்பதரைமரம் - பாதிரிமரம்
பூம்பாளை - தென்னம்பூம்பாளை
பூபாரிகமரம் - வேப்பமரம்
பூரகத்திப்பிலி - நறுக்குத்திப்பிலி
பூரகப்புல் - மத்தங்காய்ப்புல்
பூரவாக்கிச்செடி - பூலாஞ்செடி
பூரணிமரம் - இலவமரம்
பூரபதி - பச்சைக்கற்பூரம்
பூரம் - கற்பூரம், பூரபாஷாணம்
பூரிகாமரம் - அகில்மரம்
பூரிதயச்செடி - சிறு தக்காளிச்செடி
பூருண்டிக்கொடி - வேலிப்பருத்திக் கொடி
பூருதுநீறு - பூநீரு, ருதுநீரு
பூலத்திகச்செடி - பூலாஞ்செடி
பூலத்திகிரிச்செடி - பூராஞ்செடி
பூலத்திமரம் - மருதமரம்
பூலாகிக்கொட்டை - பூந்திக்கொட்டை
பூலாங்கிழங்கு - கிச்சிலிக்கிழங்கு
பூலாஞ்சிப்புல் - பூனைப்புல்
பூலாஞ்செடி - வாற்பூலாச்செடி
பூலிகாச்செடி - சுடுதுரத்திச்செடி
பூலிவிதை - வெண்பூலிவிதை
பூவண்டம் - வெங்காயம்
பூவந்திக்கொட்டை - நெய்க்கொட்டான்விரை
பூவந்திப்பழம் - மணிப் புங்குப்பழம்
பூவந்திமரம் - நெய்க்கொட்டான் மரம்
பூவரசமரம் - காய்ப்பூவரசமரம்
பூவழலை - பூநீரு, ருதுநீரு
பூவாதிகாரம் - சீனிக்காரம்
பூவிளம் - கற்பாஷாணம்
பூவைச்செடி - காயாங்குலைச்செடி
பூவோடு பாஷாணம் - தொட்டிப் பாஷாணம்
பூழியசணிக்கொடி - பூசணிக்கொடி
பூழியாசிகச்செடி - சீமையகத்திச் செடி
பூளிகச்செடி - சிறுபூளைச்செடி
பூளைச்செடி - பீளைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal