சித்த வைத்திய அகராதி 10601 - 10650 மூலிகைச் சரக்குகள்
பேய்வரளிச்செடி - ஆற்றலரிசெடி
பேய்வாதுமை - கசப்புவாதுமை மரம்
பேய்வெங்காயம் - நரிவெங்காயம்
பேய்வெருட்டிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
பேய்வெள்ளரிக் கொடி - கசப்புவெள்ளரிக் கொடி
பேய்வேனிக் கொள்ளு - பேய்க்கொள்ளுச் செடி
பேரகத்திமரம் - அகத்திமரம்
போகம் - சோளம்
பேரண்டம் - தலையோடு
போதிமரம் - பெருமரம்
பேரத்திமரம் - அத்திமரம்
பேரத்திதித்தட்டை - பேய்க்கரும்புத்தட்டை
பேரரத்தை - தும்புராஷ்டகம்
பேரவச்செடி - நரிவழுக்கை செடி
பேரவுரி - நீலவுரிச்செடி
பேரறுகு - யானையறுகுப்புல்
பேராமல்லி - பேராமுட்டிச் செடி
பேராமுகிச்செடி - பெருந்தும்பை
பேராமுட்டி - குரவிச்சிப் பூண்டு
பேரிகிச்செடி - பேய்த்துவரைச் செடி
பேரிக்காய் - அம்பளங்காய்
பேரிகச்செடி - வட்டத்திருப்பிச் செடி
பேரிகாச்சோளம் - வெண்சோளம்
பேரிஞ்சுமரம் - பேரிச்சமரம்
பேரிந்துமரம் - பேரிஞ்சுமரம்
பேரிராச்செடி - சீனச்செடி
பேருடைமரம் - பெரியவுடைமரம்
பேரேலம் - ஏலம்
பேர்க்கசிக்கொடி - கட்டுக்கொடி
பேர்க்கரிக்கிழங்கு - புளிநறளைக் கிழங்கு
பேலிகச்செடி - காட்டுக்கத்தரி
பைங்கழைமரம் - மூங்கில்மரம்
பைங்கூலிகப்புல் - பசும்புல்
பைசாசக்காளான் - பேய்க்காளான்
பைசாசத்துத்தி - பேய்த்துத்தி
பைசாசத்தும்புலாமரம் - பேய்த்தும்புலாமரம்
பைசாசத்தும்புலிச் செடி - தூம்புரவாலிச்செடி
பைசாசத்தும்பைச்செடி - பேய்த்தும்பைச்செடி
பைசாசத்தூரிதச்செடி - பேயூமத்தைச்செடி
பைசாசநெல் - மலைநெல்
பைசாசமுள்ளிச்செடி - காட்டுமுள்ளிச்செடி
பைசாசிமாஞ்சில் - சடாமாஞ்சில்
பைதிருதிக் கொடி - கொடிச்சம்பங்கி
பைந்தினை - கருந்தினை
பைந்தீலிச்செடி - பேய்ச்சுண்டைச்செடி
பைமாசுப் பழம் - பம்பளிமாசுப் பழம்
பைம்பேயகக்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
பைம்பொன்மல்லிகைமரம் - பொன்னூமத்தைச் செடி
பைம்பொன்னரளிமரம் - தங்கரளிமரம்
பைரவமரம் - பேயகத்தி மரம்
சித்த வைத்திய அகராதி 10601 - 10650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal