சித்த வைத்திய அகராதி 10501 - 10550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10501 - 10550 மூலிகைச் சரக்குகள்


பேதிதயச்செடி - காட்டுக்கத்திரிச் செடி
பேதியாகுமூலிகைகள் - சிவதை, பாக்கு, நேர்வாளக்கொட்டை, கடுக்காய், நிலவாகை, சூரத்து நிலவாகை, முடக்கத்தான்கொடி.
பேதியாவரை - சூரத்தாவரை
பேதியாவிகக் கொட்டை - நேர்வாளக் கொட்டை
பேதியைக்கட்டுமூலிகை - வசம்பு
பேதிரஞ்சனமரம் - தணக்குமரம்
பேதிவாளம் - நேர்வாளம்
பேதுகச்செடி - காட்டுசீரகச்செடி
பேப்பாட்சிச்செடி - பேய்ப்பாட்சிச் செடி
பேமாசிகச்செடி - பேய்க்கடலைச் செடி
பேயகத்தி - கசப்பகத்திமரம்
பேயகிக்காளான் - பேய்க்காளான்
பேயத்திமரம் - காட்டத்திமரம்
பேயம்மான் பச்சரிசி - சின்னம்மான் பச்சரிசிச்செடி
பேயவரை - காட்டவரை
பேயனுள்ளிச்செடி - காட்டுள்ளிச்செடி
பேயன்வாழி - மொந்தைவாழை
பேயால்மரம் - கல்லால்மரம்
பேயாவிரை - சுடலையாவரைச் செடி
பேயிலவமரம் - முள்ளிலவமரம்
பேயிலீசக்கள்ளி - நாகதாளிக் கள்ளி
பேயிலுப்பைச்செடி - காட்டிலுப்பைச் செடி
பேயிவரகு - காட்டுவரகு, கூவரகு
பேயுள்ளி - காட்டுள்ளி
பேயூசிதக்கொடி - பேய்ப்புடல்
பேயூமத்தைச் செடி - மருளுமத்செடி
பேயூவிதக் கற்றாழை - நாய்க்கற்றாழை
பேயெலுமிச்சை - காட்டெலுமிச்சை மரம்
பேயெள்ளு - காட்டெள்ளு
பேயோடாடிச்செடி - சிவகரந்தைச் செடி
பேய்க்கடலை - கசப்புக் கடலைச்செடி
பேய்க்கடுக்காய் - சிறுகடுக்காய்
பேய்க்கண்டகமரம் - பேய்த்தேற்றா மரம்
பேய்க்கத்திரி - காட்டுக் கத்திரிச்செடி
பேய்க்கரிப்பான் செடி - காட்டுக்கரிப்பான் செடி
பேய்க்கரும்பு - காட்டுக்கரும்புத் தட்டை
பேய்க்கற்றாழை - நாய்க் கற்றாழை
பேய்க்காலிக் கொடி - பூனைக்காஞ்சொரிக் கொடி
பேய்க்காளான் - மஞ்சட் காளான்
பேய்க்குமிட்டிக் கொடி - பேயக் கொம்மட்டிக்கொடி
பேய்க்கொள்ளு - கடுபுடுகாணம்
பேய்ச்சிங்கிக்கொடி - பேய் முசுட்டைக் கொடி
பேய்ச்சீந்திற்கொடி - கருஞ்சீந்திற்கொடி
பேய்ச்சீபிதச்செடி - நிலம்புரண்டிச் செடி
பேய்ச்சீரகம் - காட்டுச்சீரகம்
பேய்ச்சீலியச்செடி - பேய்க்கடலைச் செடி
பேய்ச்சுண்டை - நாய்ச்சுண்டைக் செடி
பேய்ச்சுரபிக் காளான் - பேய்க்காளான்
பேய்ச்சுரைக்கொடி - கசப்புக்சுரைக் கொடி
பேய்ச்சேதிகம் - பேய்க்கற்றாழை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal