சித்த வைத்திய அகராதி 10451 - 10500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10451 - 10500 மூலிகைச் சரக்குகள்


பெருமராசிதச்செடி - வெள்ளைக் கொழுஞ்சிச் செடி
பெருமருந்துக் கொடி - தலைசுருளிக் கொடி
பெருமலர்க்கொன்றை - செழுமலர்க் கொன்றைமரம்
பெருமுட்டைச் செடி - பீநாறிச்சங்கஞ் செடி
பெருமுண்டினி மரம் - திருவாத்தி மரம்
பெருமுள்ளிச்செடி - காட்டுமுள்ளிச் செடி
பெருமுள்ளிலவமரம் - பேயிலவ மரம்
பெருமுன்னைமரம் - மலைமுன்னை மரம்
பெருமூங்கில் மரம் - மலைமூங்கில் மரம்
பெருமூசிகிமரம் - தேக்குமரம்
பெரும்பசளைக்கீரை - செம்பசளைக் கீரை
பெரும்பயறு - மொச்சைப்பயறு
பெரும்பருத்திச் செடி - லண்டன் பருத்திச் செடி
பெரும்பனம் பூ - கொய்யாத பூ
பெரும்பன்னாடை - நெய்யாத ஆடை
பெரும்பாண்டக்கொடி - பூசிணிக்கொடி
பெரும்பிரமி - மலைப்பிரமிச் செடி
பெரும்பீழைச் செடி - பெருபூம்ளைச் செடி
பெரும்புடற்கொடி - பேய்ப்புடற்கொடி
பெரும்புள்ளடி - சூதப் புள்ளடிச்செடி
பெரும்பூகிக்காய் - தேங்காய்
பெரும்பூசணிக்காய் - வெள்ளைப் பூசணிக்காய்
பெரும்பூதால மரம் - கல்லால மரம்
பெரும்பூளைச்செடி - கண்பூளைச்செடி
பெரும்பூனிதச்சுரை - பெருஞ்சுரைக் கொடி
பெரும்பூனைக்காலி - பூனைக்காஞ்சொரிச் செடி
பெருலவங்கப் பட்டை - லவங்கப் பட்டை
பெருலாகிகப்புடல் - நெடும் புடற்கொடி
பெருவலாகக்கற்றாழை - மருட்கற்றாழை
பெருவள்ளிக் கிழங்கு - ஆள்வள்ளிக் கிழங்கு
பெருவாகைமரம் - வாகைமரம்
பெருவாலமரம் - விழுதாலமரம்
பெருவிளாமரம் - விளாமரம்
பெருவிளிச்செடி - நரிவிளிச்செடி
பெருவீடுகொள்ளு - கொள்ளுச்செடி
பெருவீளிமரம் - விருசமரம்
பெருவெங்காயம் - யானை வெங்காயப்பூண்டு
பெருவேம்பு - மலைவேம்புமரம்
பெல்லேடோனாச் செடி - சீனத்துச்செடி
பெல்லௌணச்செடி - நாயுருவிச்செடி
பென்னைவிருட்சம் - பூதவிருட்சம்
பேதகிக்காரம் - வெங்காரம்
பேதனா - பேதானா
பேதாதிகமரம் - காட்டிலுப்பை மரம்
பேதாரிக்குறண்டிவிரை - பாற்குறண்டிவிரை
பேதி - அன்னபேதி
பேதிகாச்செடி - காட்டுக்கறி வேப்பிலைச்செடி
பேதிகாரிக்கொடி - பேய்க்குமிட்டிக் கொடி
பேதிகாலிகம் - சிவதைவேர்
பேதிக்கிழங்கு - ரேவல் சின்னிக்கிழங்கு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal