சித்த வைத்திய அகராதி 9651 - 9700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9651 - 9700 மூலிகைச் சரக்குகள்


பாடிகாக்குழம்பு - சந்தனம்
பாடிசக்கோரை - பெருங்கோரை
பாணம்பழைச்செடி - குறிஞ்சாச்செடி
பாணவிக்கொடி - தட்டைபயற்றின்கொடி
பாணன்செடி - காட்டாமணக்குச்செடி
பாணி - தண்ணீர்
பாணிதம் - கருப்பஞ்சாறு
பாணிப்பூ - இலுப்பைப்பூ
பாணியக்கொடி - தண்ணீற்கொடி
பாணிவிருட்சம் - தென்னைமரம்
பாண்டில்மரம் - வாகைமரம்
பாண்டுகச்செடி - சிறுபூளைச்செடி
பாண்டுகமரம் - கருந்தேற்றாமரம்
பாண்டுநாசனிமரம் - பேயத்திமரம்
பாண்டுலாக்கொடி - கறிப் புடோற்கொடி
பாண்டுவாமச்செடி - புறா முட்டிச்செடி
பாதசத்துவமரம் - அரசமரம்
பாதரசம் - சூதம்
பாதிரிமரம் - பாடலிமரம்
பாதரோகணமரம் - அரசமரம்
பாதவப்பூடு - மலைதாங்கிப் பூடு
பாதாளமூலி - ஆடுதீண்டாப் பாளை
பாதாளவட்டிப்புல் - பூனைப்புல்
பாதிரிமரம் - மலையாத்திமரம்
பாதுகக்கொடி - பெருஞ்செருப்படைக்கொடி
பாத்தபச் செடி - புறாமுட்டிச் செடி
பாத்தியற்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
பாத்திரகிமரம் - பூம்பாதிரிமரம்
பாத்திரிகாமரம் - மருதுமரம்
பாப்புரிமாதளை - கொம்மட்டிமாதளை
பாமநவரிசி - வாலுளுவையரிசி
பாமதுவாச்செடி - ஆடாதோடைச்செடி
பாம்புகொல்லி - கெந்தகம்
பாம்புகொல்லிப்பூண்டு - கீரிப்பூண்டு
பாம்புக்கண்ணிச் செடி - சங்கங்குப்பிச் செடி
பாயசக்கொடி - பாற்சொற்றிக் கொடி
பாய்க்கோரை - பெருங்கோரை
பாய்ச்சுகண்டிமரம் - வசுவாசிமரம்
பாய்விரிக்கொடி - பசளைக்கொடி
பாரங்கு - சிறுதேக்கு
பாரசிகைமரம் - கருவத்திமரம்
பாரி - கோட்டம்
பாரிக்கைவரிச் செடி - பெருநாகதாளிச் செடி
பாரிசாதமரம் - பவள மல்லிகைமமரம்
பாரிண்டிவேம்பு - சிவனார்வேம்பு
பாரிபத்திரமரம் - வேப்பமரம்
பாரிபாசமரம் - குடைவேல்மரம்
பாரியக்காய் - கடுக்காய்
பாரிவர்ணச் செடி - முள்ளங்கிச் செடி
பாரையுப்பு - திருப்புணியுப்பு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal