சித்த வைத்திய அகராதி 9601 - 9650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9601 - 9650 மூலிகைச் சரக்குகள்


பனிச்சக்கீரை - முள்ளிக்கீரைச் செடி
பனிச்சித்தகலை - வெண்தகரைச்செடி
பனிதாங்கிப் பூடு - கிழவன்தாடிப் பூடு
பனிதிகாக் கொட்டை - சேங்கொட்டை
பனிநீர் - ஐசுக்கட்டிநீர் - சுத்தகங்கை நீர்
பனிப்பகைச்செடி - சூரியகாந்திச்செடி
பனிப்பயற்றங்கொடி - சிறுபயற்றங்கொடி
பனிப்பூடு - சுத்தகங்கை நீர்
பனைவாழை - அடுக்குவாழை
பன்மயச்செடி - கருங்கரிப்பான் செடி
பன்றிக்குறும்புக் கிழங்கு - கோரைக் கிழங்கு
பன்றிப்புல் - ஒட்டுப்புல்
பன்றிமொத்தைச் செடி - சிறுகுறிஞ்சாச் செடி
பன்றுகச்செடி - அசமதாகச் செடி
பன்னற்செடி - பருத்திச்செடி
பன்னாகச்செடி - துளசிச்செடி
பன்னிச்செடி - சணற்செடி
பன்னியமேனிச்செடி - இருப்பவற்செடி
பன்னீர் - வாசைன நீர்
பன்னீர்ப்பூமரம் - தெய்வப்பூமரம்
பன்னை - சூடன் - வெடியுப்பு
பாகற்கொடி - மிதிபாகற்கொடி
பாகிரி - ஐங்காயக்கரு
பாக்குமரம் - கமுகுமரம்
பாங்க பாஷாணம் - பலன்றுருக பாஷாணம்
பாங்குமம் - கருஞ்சீரகம்
பாசகக்கொடி - பெருங்குமிட்டிக் கொடி
பாசகம் - சீரகம்
பாசகிக்கொடி - வெற்றிலைக்கொடி
பாசருகமரம் - அகில்மரம்
பாசவேடச்செடி - கருந்தகரைச்செடி
பாசனபேதிக்கொடி - செப்புநெருஞ்சிற்கொடி
பாசி - நீர்ப்பாசி
பாசிகாதிமரம் - கருமருதுமரம்
பாசிப்பயற்றங்கொடி - பச்சைப்பயற்றங்கொடி
பாசியாச் செடி - சிறுதும்பைச் செடி
பாசுகிமரம் - மூங்கில்மரம்
பாசுபதாகிச்செடி - வெள்ளெருக்குச் செடி
பாசுவாகிச்சசெடி - காட்டாமணக்குச் செடி
பாச்சகிக்கீரை - தண்டங்கீரை
பாச்சான்கள்ளிமரம் - கள்ளிமரம்
பாச்சிகாக்கொடி - பாலாட்டங்கொடி
பாடலமரம் - பாதிரிமரம்
பாடலாங்கிரிச்செடி - புறா முட்டிச்செடி
பாடலிமரம் - வெண்பாதிரிமரம்
பாடலியமரம் - பாதிரிமரம்
பாடாகப்பாளை - பங்கம் பாளைக்கொடி
பாடாசிதச்செடி - கல்வாழைச்செடி
பாடாவவரை - தம்பட்டையவரைக் கொடி
பாடாவனசச் செடி - பெருஞ்சிமிட்டிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal