சித்த வைத்திய அகராதி 9551 - 9600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9551 - 9600 மூலிகைச் சரக்குகள்


பறங்கிப்பூகிணி - கோடைப்பூசிணிக்கொடி
பறங்கிப்பூரகிமரம் - ஒட்டுப்பலாமரம்
பறங்கி யாதளை - சிவப்பாதளைச் செடி
பறங்கியாதீதம் - பரங்கிப்பாஷாணம்
பறங்கி யாமணக்கு - சீமையாமணக்குச்செடி
பறட்டைக்கீரை - காட்டுக்கீரை
பறட்டைச்செடி - காட்டுக்கீரைச்செடி
பறந்தலைக்காடு - சுடுகாடு
பறம்பைமரம் - கருத்தாளிமரம்
பறவைவேந்தன்கொடி - கருடக்கொடி
பறிவைச்செடி - நந்தியாவட்டைச் செடி
பறுகிக் கற்றாழை - சீமைக்கற்றாழை
பறுணிகைக்கொடி - சீந்திற்கொடி
பறுணிச்சாராயம் - அரக்குச்சாராயம்
பறுணிச்செடி - சிறுகுமிழ்ச்செடி
பறுணிமரம் - பெருங்குமிழ்மரம்
பறைக்கொடி - வல்லாரைக்கொடி
பளைசீவிச்செடி - சிறுநன்னாரிச்செடி
பறைநீதச்செடி - வெள்ளையாதளைச்செடி
பற்களின் வலுவைக் குறைக்குமூலிகைகள் - முள்ளங்கிக் கிழங்கு,
பனிக்கட்டி, புளித்தபதார்த்தகம், அதிகச்சுடு
கையன்னம், இவைகளை உபயோகிக்க
பற்களின் பலத்தைக் குறைக்கும்
பற்களுக்கு வலுவைக் கொடுக்குமூலிகைகள் - தாதுமாதுளைப்பூ,
சுட்டகரி, கடுக்காய்த்தோல், சாரம்,
பாக்குச்சாரம், சீரகம், பன்னீர், கோரைக்கிழங்கு
ஏலம், மிளகு இவைகளை உபயோகிக்க
வலுவைக் கொடுக்கும்
பற்படாகம் - பற்படகம்
பற்படிகச்செடி - சிவப்பாதளைச்செடி
பற்பராகக் கொடி - தாமரைக் கொடி
பற்பரிச்செடி - தைவேளைச்செடி
பற்பருகக்கல் - மாக்கல்
பற்பாசகச்செடி - கருந்தகரைச் செடி
பற்பாறைப்பூ - செங்காந்தட்பூ
பனங்கட்டி - பனைவெல்லம்
பனங்கள்ளு - பனம்பால்
பனங்கற்கண்டு - சிவப்புகற்கண்டு
பனங்கற்றாழை - கருங்கற்றாழை
பனங்கோவை - அப்பைக்கோவை
பனசக்கொடி - பாற்சொற்றிக்கொடி
பனசப்பாசிக்கொடி - பழம்பாசிக்கொடி
பனசமரம் - பலாமரம்
பனசயக்காய் மரம் - கருங்கடுக்காய்மரம்
பனசயித்திமரம் - அரசுமரம்
பனந்தாழை - பூந்தாழைமரம்
பனரைக்கொட்டான் விரை - நெய்க்கொட்டான்
பனிக்கஞ்சிக்கொடி - தாமரைக்கொடி
பனிச்சகாக்கோரை - கஞ்சாங்கோரை
பனிச்சக்காய் - சீமைப்பரிணிக்காய்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal