சித்த வைத்திய அகராதி 9501 - 9550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9501 - 9550 மூலிகைச் சரக்குகள்


பல்லினாற்குழலிக்கொடி - சவுரிக்கொடி
பல்லினாற்மரம் - ஆத்திமரம்
பல்லுகமரம் - பெருவாகைமரம்
பல்விளக்குமூலிகைகள் - ஆலவிழுது, வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி,
நாயுருவி வேர், பூலா
பவநாதிக்கொடி - பசளைக்கொடி
பவளக்குறிஞ்சாச்செடி - செங்குறிஞ்சாச்செடி
பவளக்குறுந்தஞ்செடி - செங்குறுந்தஞ்செடி
பவளக்குன்றிமணிக்கொடி - குண்டுமணிக் கொடி
பவளச யிண்டு - செவ்விண்டங்கொடி
பவளச் சருக்கரைவள்ளி - சிவப்புச்சருக்கரைவள்ளிக் கிழங்கு
பவளச்சோளம் - செஞ்சோளம்
பவளத்துத்தி - செநதுத்திச்செடி
பவள நெய்ச்சிட்டி - சிவப்புநெய்ச்சிட்டி
பவளப்புற்றுப்பாஷாணம் - பவளபாஷாணம்
பவளமல்லிகை - மரமல்லிகைச்செடி
பவளமனச்சிலை - மனோசிலை
பவளமூக்கரைச் சாரணை - சிவப்பு மூக்கரைச்சாரணைக் கொடி
பவளவகத்திமரம் - செவ்வகத்திமரம்
பவளவல்லிக் கொடி - சிவப்புஅல்லிக் கொடி
பவளவறுகு - செவ்வறுகுப்புல்
பவளவாருதிக் கொடி - சிறுசெண்பகந்கொடி
பவளவெலிச்செவிக்கீரை - சிவப்பெலிச்செவிக்கீரை
பவளகுமரப் பூண்டு - தீமுறிப்பூண்டு
பவித்திரியப்புல் - கருப்பைப்புல்
பவீகயமரம் - நிலவிளாமரம்
பழமுண்ணிப்பாலை - குளப்பாலைக் கொடி
பழமுண்ணியரிசி - மாதளைவிரை
பழம் - எலுமிச்சம்பழம்
பழம்பஞ்சிக்கிழங்கு - உருளைக்கிழங்கு
பழம்பட்டு - கிழிந்தபட்டு
பழம்பலாமரம் - பலாமரம்
பழம்பாசகம் - கருஞ்சீரகம்
பழம்பாசிக்கொடி - கொடிப் பாசி
பழம்பிசின் - சாலாம்பிசின்
பழம்புளி - கொறுக்காப்புளி
பழுபாகற்கொடி - காட்டுப் பழுபாகற்கொடி
பழுபாக்கு - கொட்டைப்பாக்க
பழுமரம் - ஆலமரம்
பழுவக்கொடி - காட்டவரைக்கொடி
பளிறம் - கற்பூரம்
பறங்கிக்கொடி - பூசணிக்கொடி
பறங்கிக்கொறுக்கைப் புளி - சீமைக்கொடுக்காப்புளி
பறங்கிச்சாம்பிராணி - பாற்சாம்பிராணி
பறங்கிச்சிலிப்பட்டை - பறங்கிப் பட்டை
பறங்கித் தாழை - அண்ணாசித்தாழைமரம்
பறங்கித்திராய் - பம்பந்திராய்
பறங்கிப் பட்டை - சீமை அந்திமந்தாரைப்பட்டை
பறங்கிப்பாஷாணம் - மேகநிறப்பாஷாணம்
பறங்கிப்பிச்சிச் செடி - சீனப்பிச்சிச் செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal