சித்த வைத்திய அகராதி 9701 - 9750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9701 - 9750 மூலிகைச் சரக்குகள்


பாரையுப்புக்கோரை - உப்பங்கோரை
பார்ச்சாகிகவறுகு - வெள்ளறுகுச் செடி
பார்ச்சிகைப் பூடு - மயிற்சிகைப் பூடு
பார்ப்பைமரம் - பரம்பைமரம்
பார்வணக்கள்ளி - மான்செவிக்கள்ளி
பார்வதமரிசி - வாலுளுவையரிசி
பார்வதாதிகவிருட்சம் - சோதிவிருட்சம்
பார்வதிக்கொடி - தாளிக்கொடி
பார்வதிமரம் - ஆத்திமரம்
பாலகம் - கோட்டம்
பாலகனச்செடி - காரைச்செடி
பாலஸ்மச்செடி - சீமைச்செடி
பாலடைக்கொடி - சித்திரப்பாலாடைக் கொடி
பாலதனயமரம் - கருங்காலிமரம்
பாலதிக்கற்றாழை - சோற்றுக்கற்றாழை
பாலமுடாங்கிக்கொடி - வேலிப்பருத்திக் கொடி
பாலரசம் - சூதகம்
பாலாட்டங்கொடி - ஆட்டாங்கொடி
பாலாந்தெள்ளுக் கொடி - இனங்கீலகக் கொடி
பாலிகைச்செடி - அடம்புச் செடி
பாலிதமரம் - தேக்குமரம்
பாலிமரம் - ஆலமரம்
பாலிருளிமரம் - வெள்ளிருள்மரம்
பாலிவிக்கிழங்கு - சருக்கரைவள்ளிக் கிழங்கு
பாலிறுவிமரம் - முறுக்குமரம்
பாலினிவிருட்சம் - முண்டக விருட்சம்
பாலின் மூன்றாந் தம்பி - வெண்ணெய், நெய்
பாலுகவள்ளிச்செடி - கற்பூரவள்ளிச்செடி
பாலூகமரம் - குடைவேலாமரம்
பாலைமரம் - வெப்பாலைமரம்
பாலைமாருதக்கொடி - பிரண்டைக்கொடி
பாலொடுவி - கொடிப்பாலை
பால்கண்டிதமரம் - பாற்கடுக்காய் மரம்
பால்நீர்முள்ளி - வெள்ளைநீர் முள்ளிச்செடி
பால்பாச்சான்கள்ளி மரம் - மரக்கள்ளி
பால்புங்கு - காட்டுப்புங்குமரம்
பால்மரம் - கள்ளிமரம் , ஆலமரம்
பால்முறிந்தநீர் - செயநீர்
பால்வதிமரம் - அனிச்சமரம்
பால்வள்ளிக் கிழங்கு - சருக்கரைவள்ளிக் கிழங்கு
பாவட்டைச்செடி - சிவப்புப்பாவட்டைச் செடி
பாவாடைப்பூ - இலுப்பைப்பூ
பாற்கடுக்காய் - செங்கடுக்காய்
பாற்காசிச்செடி - பொன்னூமத்தைச் செடி
பாற்காயம் - பெருங்காயம்
பாற்குழம்பமரம் - பாலொடுவை மரம்
பாற்குறண்டி - காய்க் குறண்டிச் செடி
பாற்கொழுஞ்சி - கொழுஞ்சிச்செடி
பாற்சாதமரம் - சொரி வழுக்கைமரம்
பாற்சாதம் - அமுதுச்சாதம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal