சித்த வைத்திய அகராதி 10101 - 10150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10101 - 10150 மூலிகைச் சரக்குகள்


புளிப்புக்கொழுஞ்சி - செங்கொழுஞ்சிச்செடி
புளிப்புக்கொழுமிச்சை - புளிக்கொழுமிச்சை
புளிப்புக்கோளிச்சிலும்பான் - பெருஞ்சிலும்பான்
புளிப்புநவ்வல்மரம் - புளிநவ்வல்மரம்
புளிப்புநாரத்தைமரம் - நாரத்தைமரம்
புளிப்புநாறிக்கொடி - புளிச்சாங்கொடி
புளிப்புநீராகாரம் - காடிநீராகாரம்
புளிப்புப்பிரண்டைக்கொடி - புளியம்பிரண்டை
புளிப்புமாதளை - புளிமாதளை
புளிப்புமாதிகமரம் - புளிப்புமாமரம்
புளிப்புமாமரம் - காட்டுமாமரம்
புளிப்புமாமிசப் பட்டை - புளியபட்டை
புளிப்புமுந்திரி - புளிமுந்திரி
புளிமதுரக்கிழங்கு - புலிநரளைக்கிழங்கு
புளிமாதளை - புளிப்புமாதளை
புளியஞ்சிறுகீரை - புளிச்சிறுகீரை
புளியமரம் - புளிமரம்
புளியம்பாசி - நீர்பாசி
புளியம்பிரண்டை - புளிப்பிரண்டை
புளியறணை - புளிநரளைப் பூண்டு
புளியாரைக்கீரை - புளிப்பாரைக் கீரை
புளிவஞ்சி - புளிப்புவஞ்சி
புள்ளிகாப்பாசி - கண்ணீர்ப்பாசி
புள்ளியச்செடி - சிறுகுறிஞ்சாச்செடி
புள்ளுமருது - பிள்ளைமருது
புறங்காடு - சுடுகாடு
புறங்கைநாறி - விடங்குநாறிக்கொடி
புறதாகவரிசி - பச்சரிசி
புறம்பலைச்செடி - முல்லைச்செடி
புறம்பேசிகச்செடி - சைதனனியம் பாஞ்சான்
புற்குறிஞ்சிச்செடி - சிறுகுறிஞ்சிச்செடி
புற்கூலிகச்செடி - ஆடாதோடைச்செடி
புற்கொடி - அறுகங்கொடி
புற்கோரை - சிறுகோரைப்புல்
புற்பதிமரம் - பனைமரம்
புற்புதக்கொடி - மூக்கரைச்சாரணத்திக் கொடி
புற்போதிமரம் - பூவரசமரம்
புற்றாளிச்சிகைச் செடி - தாமிரச்சிகைசெடி
புற்றாளிமரம் - பனைமரம்
புற்றான்சோறு - கரையான்கூடு
புற்றுக்காளான் - மஞ்சட்காளான்
புற்றுக்சீரம் - கருஞ்சீரகம்
புற்றுச்சோறு - புற்றாஞ்சோறு
புற்றுத்தேன் - கன்னித்தேன்
புனம்புளி - கொறுக்கைப்புளி
புனரவக்கொடி - சாரணைக்கொடி
புனலரிசி - வரகரிசி
புனலுப்பு - பூநீருப்பு
புனல்மல்லிகை - காட்டுமல்லிகை
புனல்முருங்கைமரம் - கசப்புமுருங்கைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal