சித்த வைத்திய அகராதி 9301 - 9350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9301 - 9350 மூலிகைச் சரக்குகள்


படப்பிரண்டை - நாகப்பிரண்டை
படப்பூவைமரம் - பரம்பைமரம்
படப்பொரிச்செடி - துத்திச் செடி
படமகிப்பாலை மரம் - வெப்பாலை மரம்
படமக்கிமரம் - தாழைமரம்
படமடக்கிச்செடி - சிறியாணங்கைச்செடி
படரைக்கீரை - ஆரைக்கீரை
படரைச்செடி - ஆவிரைச்செடி
படர்காய்க்கொடி - பீர்க்குக்கொடி
படர்காரைச்செடி - காரஞ்செடி
படர்காளிச்செடி - தக்காளிச்செடி
படர்தவசிச்செடி - சன்னிநாயகச்செடி
படலிகைக் கொடி - படர் காய்க்கொடி
படவிகமரம் - நுணாமரம்
படவைக்கொடி - சிறுசெருப்படி
படாகைக்கீரை - பண்ணைக்கீரை
படாரமுக்கிச்செடி - நாயுருவிச்செடி
படிகநீர் - அமுதநீர்
படிகம் - பளிங்கு
படீரகம் - சந்தனம்
படீரயச் செடி - செந்நாயுருவிச்செடி
படுகாரம் - பொரிகாரம்
படுவநாயகிக்கொடி - பாற்சொற்றிக்கொடி
படைச்சிக்கொடி - நீர்க்குறிஞ்சாக்கொடி
படைதுரத்தும்ராஜன் - வெடியுப்பு
படைப்பேயன்மரம் - துவரை மரம்
படை ராஜன் - படைதுரத்தும் ராஜன்
படோலகக்கொடி - பேய்ப்புடோல்
படோலிக்கீரை - சொக்கரக்கீரை
படோலிகைக்கொடி - வெள்ளரிக்கொடி
பட்டகச்செடி - புழக்கொல்லிச்செடி
பட்டகாரிச்செடி - சிறுநீலிச்செடி
பட்டாணிக்கடலை - உருண்டைக்கடலை
பட்டாத்திரிகச்செடி - சிறுபூலாச்செடி
பட்டிகைச்செடி - நந்தியாவட்டைச்செடி
பட்டிதவியக்கொடி - பூனைக்காலிக்கொடி
பட்டுப்பருத்தி - நாற்பருத்தி
பட்டுப்பூச்சிநீர் - சூதகநீர்
பட்டுமந்தாரை - மந்தாரைமரம்
பட்டைக்காலிகம் - சன்னலவங்கப்பட்டை
பட்டைக்குலிகம் - பரங்கிப்பட்டை
பணிதிக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
பணுக்கம் - வசியம்
பண்டகமூங்கில் மரம் - பெருமூங்கில்மரம்
பண்டகிச்செடி - சேம்புக்செடி
பண்டிகிரிக்கொடி - வல்லாரைக்கொடி
பண்டு - பழம்
பண்டுகச்செடி - அசமதாகச்செடி
பண்டுகச்சோபிதமரம் - சோதிவிருட்சம்
பண்டுகமரம் - செவ்வகத்திமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal