சித்த வைத்திய அகராதி 9251 - 9300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9251 - 9300 மூலிகைச் சரக்குகள்


பசுமூலி - பச்சைப்புல்
பசுமை - பச்சை
பசும்பிடிப்புல் - அறுகம்புல்
பசுவின்பால் - ஆவின்பால்
பசூசகமரம் - வெள்ளுகாமரம்
பச்சமஞ்சள் - மரமஞ்சள்
பச்சாகிலிகமரம் - செண்பகமரம்
பச்சாளைமரம் - நொச்சிமரம்
பச்சினி - பத்தாமாதம்
பச்சைக்கடலை - கடலை - சிறுகடலை
பச்சைக்கடுகு - செங்கடுகு
பச்சைக் கடுக்காய் - அரிதகிக்காய்
பச்சைக்கற்பூரம் - சேர்க்கைப்பூரம்
பச்சைக்குங்குமப்பூ - ஈரக்குங்குமப்பூ
பச்சைக்கொட்டைத் தாமரை - ஆகாசத் தாமரை
பச்சைக்கொம்பு - இஞ்சி
பச்சைத்திப்பிலிவேர் - திப்பிலி வேர்
பச்சைநஞ்சு - பாஷாணம்
பச்சைநாவிக் கிழங்கு - கலப்பைக்கிழங்க
பச்சைநிறக்கொடி - முசுமுசுக்கைக் கொடி
பச்சைப்பயறு - பாசிப்பயற
பச்சைப்பாக்கு - காயாப்பாக்கு
பச்சைப்பாதிகச்செடி - வெள்ளை வாடாமல்லிகைச் செடி
பச்சைப்பூரம் - பச்சைக்கற்பூரம்
பச்சைப்பைக்கொடி - பைதிருதிக்கொடி
பச்சைமிளகாய் - ஈரமிளகாய்
பச்சைமுளகாய் - ஈரமிளகாய்
பச்சையரிசி - பாலரிசி
பச்சைவாரிகமரம் - பரம்பைமரம்
பச்சைவாழைமரம் - பச்சைநிறவாழை மரம்
பச்சைவானகமரம் - சொத்தைஈருவல்லி மரம்
பச்சைவிளாமிச்சைவேர் - விளாமிச்சை வேர்
பஞ்சபூதச்சரக்கு - தாரம், வீரம், செளரி, வெள்ளை, லிங்கம்
பஞ்சமித்திரம் - பேதிக்கச்செய்வது
பஞ்சமுகச்செடி - எலியாமணக்குச் செடி
பஞ்சமூலம் - சுக்கு, செவ்வியம், பேராத்தை, சித்தர்மூலம், திப்பிலிமூலம்
பஞ்சரச்செடி - புளியாரைச்செடி
பஞ்சரம் - பருத்தி
பஞ்சரிக்கொடி - அவரைக்கொடி
பஞ்சவர்ண அந்திமல்லி - பலவர்ணஅந்திமல்லிச் செடி
பஞசாங்குலச்செடி - ஆமணக்குச்செடி
பஞ்சாடுதங்ஐ - கொடியிலந்தை
பஞ்சாமிலச்செடி - இலந்தைச்செடி
பஞ்சாமுதம் - பழம், சருக்கரை, நெய், தேன், தேங்காய்ப்பூ
பஞ்சாயப்புல் - கோரைப்புல்
பஞ்சாலைப்பட்டை - பூவரசம்பட்டை
பஞ்சு - பருத்திநூல்
பஞ்சுநாளக்கொடி - அடப்பாங்கொடி
படகச்செடி - விஷ்ணுகரந்தைச் செடி
படங்கச்செடி - புறாமுட்டிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal