சித்த வைத்திய அகராதி 2801 - 2850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2801 - 2850 மூலிகைச் சரக்குகள்


கடுஞ்சாரம் - நவச்சாரம்
கடுஞ்சீரகந்தச்செடி - நேத்திரஞ்சிமிட்டிச்செடி
கடுதீத்தாதி - வெண்கடுகு
கடுதும்பிக்கொடி - பேய்ச்சுரை
கடுநிம்பச்செடி - நிலவேம்புச்சேடி
கடுந்தாளிச்செடி - வெண்தாளிச்செடி
கடுந்திச்செடி - நாயுருவிச்செடி
கடுந்தீபவிருட்சம் - சோதிவிருட்சம்
கடுபுடுகொள்ளுச்செடி - காட்டுக்கொள்ளுச்செடி
கடுபூரிவல்லிமரம் - ஈருவல்லிமரம்
கடுப்படக்கிச்செடி - வெதுப்படக்கிச்செடி
கடுப்பதாதிமரம் - ஈன்மரம்
கடுப்பூமத்தைச்செடி - கருவூமத்தைச்செடி
கடுப்பேகிகமரம் - உதிரவேங்கைமரம்
கடுப்பை - வெண்கடுகு
கடுமஞ்சரிச்செடி - நாயுருவி
கடுமாசகமரம் - காஞ்சிரைமரம்
கடுமிசப்புல் - உப்பங்கோரைப்புல்
கடுமுட்கத்திரிக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
கடுமேதிவிருட்சம் - எருமைவிருட்சம்
கடும்பலைக்கிழங்கு - கருணைக்கிழங்கு
கடும்பைக்கடுகு - வெண்கடுகு
கடுவங்கம் - வெள்வங்கம்
கடுவன்மரம் - மாவுலிங்கமரம்
கடுவாய்ச்செடி- நாய்த்துளசி
கடுவிலிரோகிணி - கமுகுரோகிணி
கடுவேலைப்பாசி - கடற்பாசி
கடோpயமஞ்சள் - மரமஞ்சள்
கடைகெட்டமரம் - இலட்சைகெட்டமரம்
கடைச்சிக்கொடி - நெட்டிக்கொடி
கடைச்சித்தலரி - ஈழத்தலரிசெடி
கடைச்சித்தாழை - பரங்கித்தாழை
கட்டஞ்சலி - மூக்கு
கட்டாரிப்பூண்டு - எழுத்தாணிப்பூண்டு
கட்டிமூதண்டமரம் - கொடுக்காப்புளிமரம்
கட்டுக்கொடி - திசைக்கருடன்க்கொடி
கட்டுசாரைச்செடி - மருளுமத்தைச்செடி
கட்பலமரம் - தான்றிமரம்
கட்பலாமரம் - கானற்பலாமரம்
கணபுடம் - நூறெருப்புடம்
கணப்பாண்டுபோக்கிக்கொடி - வெண்கழற்சிக்கொடி
கணப்பூண்டிலை - சுடுதுரத்திசெடி
கணமாங்கிசம்போக்கி - அபின்
கணமூலிச்செடி - பெருந்தும்பை
கணமேசெஞ்சீவிச்செடி - வனமிரட்டிச்செடி
கணமேகம்போக்கி - திப்பிலி
கணவசாரம் - நவச்சாரம்
கணவமரம் - அரசமரம்
கணவீரச்செடி - அலரிச்செடி
கணவுமூங்கிகம் - விஷமூங்கில்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal