சித்த வைத்திய அகராதி 2751 - 2800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2751 - 2800 மூலிகைச் சரக்குகள்


கடற்கெடித்தாமரை - கடற்றாமரைக்கொடி
கடற்கொடித்தூமமரம் - தணக்குமரம்
கடற்கொடுபாலிகச்செடி - ஆள்வாடைதட்டிச்செடி
கடற்கொழுப்பூண்டு - எழுத்தாணிப்பூண்டு
கடற்சோகி - சமுத்திரசோகி
கடற்பச்சை - சமுத்திராபச்சை
கடற்பாசி - வாரிதிப்பாசி
கடற்பாசிநீர் - சுத்தசலநீர்
கடற்றாமரை - பெருந்தாமரை
கடற்றாழிகக்கள்ளி - இலைக்கள்ளி
கடற்றாழை - சமுத்திராதாழை
கடற்றிலகக்கொடி - நீர்ச்சுண்டிக்கொடி
கடாநாரத்தை - பெருநாரத்தைமரம்
கடாந்திரச்செடி - நிலவிளாச்செடி
கடாரைமரம் - கடாநாரத்தை
கடாவிருட்சம் - எருமைவிருட்சம்
கடிகாலிச்செடி - பூனைக்காலிச்செடி
கடிசகாலிமரம் - இலவமரம்
கடிச்சகாச்செடி - காஞ்சொறிச்செடி
கடிச்சேபகமரம் - இலுப்பைமரம்
கடிதடத்திறைவன் - லிங்கபாஷாணம்
கடிதடம் - அல்குல்
கடிப்பதை - கடுகு
கடிப்பாங்கிகச்செடி - குப்பைமேனிச்செடி
கடியஷ்டகம் - சிற்றரத்தை
கடியரிசி - வாலுளுவையரிசி
கடியிரத்தக்கொடி - குறட்டைக்கொடி
கடிலாச்செடி - மூக்குறட்டைச்செடி
கடிவாற்கொடி - கும்மட்டிக்கொடி
கடுகச்செடி - மருக்காரைச்செடி
கடுகத்திமரம் - பேயத்திமரம்
கடுகம் - கடுகுரோகிணி
கடுகாலிக்கொடி - குன்றிமணிக்கொடி
கடுகாற்கரைக்கொடி - பேய்ச்சுரைக்கொடி
கடுகீதமரம் - உடைமரம்
கடுகுரோகிணி - வெண்கடுகுரோகி
கடுகெண்ணெய் - கடுகுத்தைலம்
கடுக்களாமரம் - எட்டிமரம்
கடுக்காய் - மஞ்சட்கடுக்காய்
கடுக்காய்ப்பழம் - பீஞ்சுகப்பழம்
கடுக்காய்ப்பிஞ்சு - கற்கடகசிங்கி
கடுக்காய்ப்பூ - அரேணுப்பூ
கடுக்காப்பூரிதம் - கடுக்காய்த்தோடு
கடுக்காய்மரம் - மஞ்சட்கடுக்காய் மரம்
கடுக்கிராந்தி - இஞ்சிக்கிழங்கு
கடுக்கைமரம் - கொன்றைமரம்
கடுங்காந்திப்பாஷாணம் - வெள்ளைப்பாஷாணம்
கடுங்காரநீர் - முட்டைநீர் - பூநீர்
கடுங்குட்டத்தாளிச்செடி - மிளகுதக்காளிச்செடி
கடுசித்தாழை - பறங்கித்தாழை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal