சித்த வைத்திய அகராதி 2701 - 2750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2701 - 2750 மூலிகைச் சரக்குகள்


கச்சூரங்காய் - கழற்சிக்காய்
கச்சூரங்கொடி - கழற்சிக்கொடி
கச்சூரங்செடி - சிறுகுறட்டைச்செடி
கச்சோதவண்டு - சுழல்வண்டு
கச்சோலம் - சாதிக்காய்த்தோடு
கஞ்சகச்செடி - சுண்டைச்செடி
கஞ்சங்கொடி - தாமரைக்கொடி
கஞ்சங்கோனிதச்செடி - ஓரிலைத்தாமரைச்செடி
கஞ்சஞ்செடி - கஞ்சாச்செடி
கஞ்சநீர் - குமரிநீர்
சஞ்சாங்கோரைச்செடி - காட்டுவெண்துளசி
கஞ்சாங்கோரைப்புல் - திரற்கோரைப்புல்
கஞ்சாசீரம் - கஞ்சாயிலை
கஞ்சாச்செடி -கோரக்கர்மூலிகை
கஞ்சாஞ்சிகசெடி - சேம்புச்செடி
கஞ்சுகமரம் - முருங்கைமரம்
கடகிகாச்செடி - பெருந்தும்பை
கடம்பச்சுவேதமரம் - வெண்கடம்புமரம்
கடம்பச்சேவிகம் - ஆயிலியமரம்
கடம்பமரம் - கடம்புமரம்
கடம்பமாகிதம் - அவலரக்கு
கடம்பரிசி - வாலுளுவையரிசி
கடம்பரோகிணி - கடுகுரோகிணி
கடம்புநெல் - கருங்குருவைநெல்
கடம்புரிமரம் - வெண்கடம்பமரம்
கடம்பூலிகச்செடி - ஆடையொட்டிச்செடி
கடலடக்கிக்கொடி - பேய்முசுட்டைக்கொடி
கடலதீதச்செடி - உமுரிச்செடி
கடலழிஞ்சில் - கடலூராஞ்சி
கடலாகினிமரம் - ஆண்பனைமரம்
கடலாடிச்செடி - நாயுருவிச்செடி
கடலாமணக்குச்செடி - உரலாமணக்கு
கடலாரகமரம் - ஆவிமரம்
கடலாரை - காட்டாரை
கடலிகச்செடி - மூக்குறட்டைச்செடி
கடலுராஞ்சி - கடலழிஞ்சில்
கடலேலகச்செடி - காரௌ;ளுச்செடி
கடலைச்செடி - பொரிகடலைச்செடி
கடல்கலக்கிக்கொடி - பேய்முசுட்டைக்கொடி
கடல்நீர் - வாருதிநீர் - சமுத்திரநீர்
கடல்மடுமரம் - கடலழிஞ்சிமரம்
கடவிமரம் - தணக்குமரம்
கடவுகாசிகச்செடி - ஆவரை
கடவுயதாரகமரம் - தேவதாரமரம்
கடவைக்கிரியச்செடி - ஆற்றுமல்லிகைச்செடி
கடவைமரம் - தணக்குமரம்
கடற்கனி - சமுத்திராப்பழம்
கடற்குருவி - கஞ்சியுப்பு
கடற்கேகிதச்செடி - ஆற்றுப்பூவரசுச்செடி
கடற்கொடிச்சிச்செடி - தும்பை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal