சித்த வைத்திய அகராதி 2901 - 2950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2901 - 2950 மூலிகைச் சரக்குகள்


கண்ணுப்பீழைச்செடி - பெரும்பீழைச்செடி
கண்ணுப்போகமரம் - இருவாட்சிமரம்
கண்ணுவலிப்பூச்செடி - கலப்பைக்கிழங்குச்செடி
கண்ணொளிவு மூலிகை - கள்ளிமேற்புல்லுருவி
கண்ணொளிலையுண்டாக்கு மூலிகைகள் - நெல்லிக்காய், கடுக்காய்த்தோல்
வாதுமைப்பருப்பு, பெருஞ்சீரகம், மிளகு
கண்பூளைப்பூச் செடி - கண்ணுப்பீழைச்செடி
கண்மாய்க்கொட்டி - கொட்டிக்கிழங்கு
கண்வலிப்போக்கிச்செடி - நந்தியாவட்டைச்செடி
கதம்பமரம் - கடம்பமரம்
கதம்பாகிகவேர் - குருவேர்
கதம்பாரிமரம் - தேற்றாமரம்
கதம்பைப்புல் - பசும்புல்
கதலிமரம் - வாழைமரம்
கதலிவஞ்சி மரம் - நவரவாழைமரம்
கதிக்கைமரம் - கருக்குவாளிமரம்
கதிரவமரம் - கருங்காலிமரம்
கதிரவன்பால் - எருக்கன்பால்
கதிர்பச்சைச்செடி - பரிதிப்பச்சைக்கெடி
கதிர்ப்புல் - மலைப்புல்
கத்தகம் - சாணம்
கத்தசிகப்பாசி - இலைப்பாசி
கத்தரிநாயகச்செடி - யானைச்சீரகம்
கத்தரிமணியன் - வெள்ளெலிச்செவி மரம்
கத்திநுணாச்செடி - நிலவேம்பு
கத்தியதேமரம் - ஒட்டுமாமரம்
கத்திரிச்செடி - சிறுகத்திரி
கத்திரிநாயகம் - ஆனைச்சீரகம்
கத்திரியக்கொடி - ஆடுதின்னாப்பாளைக்கொடி
கத்துகவரிசி - சவ்வரிசி
கத்துரப்பாஷாணம் - குதிரைப்பற்பாஷாணம்
கத்துரேகமரம் - இலந்தைமரம்
கஸ்தூரி - மான்மதமூரி
கஸ்தூரிநாரத்தைமரம் - பெருநாரத்தைமரம்
கஸ்தூரிநாறிமரம் - கலைநாறிமரம்
கஸ்தூரிநீலிச்செடி - அவுரிச்செடி
கஸ்தூரிமஞ்சள் - அடவிமஞ்சள்
கஸ்தூரிமாதியமரம் - உதிர்பன்னீர்மரம்
கஸ்தூரியலரி - ரோஜாவலரி
கஸ்தூரியெலுமிச்சை - காட்டெலுமிச்கை
கத்தைக்காம்பு - துவர்க்காம்பு
கந்தகட்பலமரம் - தான்றிமரம்
கந்தகத்திராவகம் - கத்நதகச்செயநீர்
கந்தசடகமரம் - தமரத்தைமரம்
கந்தசாகிகமரம் - உகாமரம்
கந்தசுக்கிலம் - அதிவிடையம்
கந்தசூலிகம் - ஈரவெங்காயம்
கந்தநாகுலி - மிளகு
கந்தநாகுலியம் - அரத்தை
கந்தபூதியச்செடி - நாய்வேளைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal