சித்த வைத்திய அகராதி 2951 - 3000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2951 - 3000 மூலிகைச் சரக்குகள்


கந்தமச்செடி - வசம்புக்செடி
கந்தமித்திரமரம் - குமிழ்மரம்
கந்தரச்செடி புனல்முருங்கை
கந்தரபாஷாணம் - கற்கடகபாஷாணம்
கந்தருவாச்செடி - ஆமணக்குச்செடி
கந்தவசீகாப்பூ - செங்காந்தட்பூ
கந்தற்பச்சை - பச்சைக்கற்பூரம்
கந்தன்பாஷாணம் - சீர்பந்தபாஷாணம்
கந்தாத்திரிமரம் - நெல்லிமரம்
கந்தாரசம் - சந்தனம்
கந்திக்காய் - கமுகங்காய்
கந்திமரம் - கமுகுமரம்
கந்தியுப்பு - கந்தகவுப்பு
கந்திவாருணிக்கொடி - பேய்த்தும்மட்டிக்கொடி
கந்துகபாதிதமரம் - ஈச்சமரம்
கந்துகமரம் - தான்றிமரம்
கந்தேறுகப்பூண்டு - கோடகசாலைப்பூண்டு
கந்தேறுசாலை - கோடகசாலை
கந்தைக்கிழங்கு - கரணைக்கிழங்கு
கந்தைத்துணி - பழையதுணி
கந்தோடகப்பருத்தி - உப்பம்பருத்தி
கந்தோதகக்கொடி - தாமரைக்கொடி
கந்தோலிகச்செடி - செஞ்சூரைச்செடி
கபத்தச்செடி - துளசிச்செடி
கபத்திகாமரம் - ஈருவல்லிமரம்
கபநாசச்செடி - கண்டங்கத்திரிச்செடி
கபமறுக்குங்குடோரி - யானைத்திப்பிலி
கபம்போக்கியரிசி - வாலுளுவையரிசி
கபரிமரம் - பெருங்காயமரம்
கபாடமீட்டி - வசம்பு
கபாலசாந்திவிரை - ஆவிரை
கபாலம் - மண்டையோடு
கபாலவமரம் - ஈரப்பலாமரம்
கபாலன் - சீர்பந்தபாஷாணம்
கபாலாகினிப்பூமு - ஈருள்ளிப்பூடு
கபாலாத்திச்செடி - ஆவரைச்செடி
கபிநாண்டவச்செடி - செந்தகரைச்செடி
கபிதசீரம் - கருஞ்சீரகம்
கபிதாத்திரிமரம் - நெல்லிமரம்
கபித்தமரம் - விளாமரம்
கபிலபுட்பமரம் - நுணாமரம்
கபீதனமரம் - வாகைமரம்
கபீந்திரப்புளி - புனம்புளி
கபோதச்செடி - புறாமுட்டிச்செடி
கப்படகமரம் - தங்கரளிமரம்
கப்பற்கடுக்காய் - பெருங்கடுக்காய்
கப்பிகாக்கொடி - ஊனாங்கொடி
கப்பிட்டிமரம் - கருப்பட்டிவாகைமரம்
கப்புகாக்கீரை - எலிச்செவிக்கீரை
கப்புச்சடைச்சிச்செடி - வாய்க்காற்சடைச்சிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal