சித்த வைத்திய அகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்


ஆட்டுசச்செடி - ஆடாதோடை
ஆட்டுசாகிசமரம் - மலையெருக்கிலை மரம்
ஆட்டுச்செவிக்கள்ளி - ஆட்டுக்காதுக்கள்ளி
ஆட்டுத்துழாய்ச்செடி - காட்டுத்துளசிச்செடி
ஆட்டுலாமரம் - முடவாட்டுக்கால்
ஆட்டூரவேம்புமரம் - மலைவேம்பு
ஆணகக்கொடி - சுரைக்கொடி
ஆணகங்காய் - ஆண்பனையின் காய்
ஆணவபாஷாணம் - கோளக பாஷாணம்
ஆணாகவரைச்செடி - ஆவாரை
ஆணிப்பூடு - அமளைப்பூடு
ஆண்குறிப்பாஷாணம் - லிங்க பாஷாணம்
ஆண்சாரிகச்செடி - மனமுருகி
ஆண்செருப்படை - சிறு செருப்படை     
ஆண்டகப்பூ - மனோரஞ்சிதப்பூ  
ஆண்டலைமரம் - அரசமரம்   
ஆண்டிரவாழைமரம் - மலைவாழை 
ஆண்டைச்செடி - தேட்கொடுக்கு     
ஆண்துடரிச்செடி - விரகச்செடி  
ஆண்பனைமரம் - காயாப்பனைமரம்
ஆண்மதப்பூ - மதனப்பூ         
ஆண்மரம் - அழிஞ்சில்மரம்   
ஆதகாமிகமரம் - மாங்கிளுவை       
ஆதகுமரம் - கூந்தற்பனைமரம்  
ஆதகேரகச்கொடி - மாட்டுக்  குளம்படிக்கொடி   
ஆதண்டைக்கொடி - காத்தட்டி  
ஆதம்பாச்செடி - மாதேவிச்செடி  
ஆதம்பேதிக்கொடி - செம்பு நெருஞ்சிற்கொடி   
ஆதவமரம் - கொன்றைமரம்   
ஆதளைச்செடி - காட்டாமணக்கு  
ஆகாரண்டம் - முதுகெலும்பு   
ஆதிகச்செடி - சிறுகுறிஞ்சா         
ஆதிகாரகச்செடி - மாமாலைச்செடி 
ஆதிக்குரு - பூவழலை     
ஆதிச்சரக்கு - சூதம்      
ஆதித்தன் - சூரியன்            
ஆதிநாராயணன்மூலி - விஷ்ணு கரந்தை      
ஆதிபரக்காய் - சாதிக்காய்    
ஆதிமருந்து - சுக்கு, மிளகு,திப்பிலி 
ஆதியாமப்புல் - மூகைப்புல்   
ஆதிவிந்து - நிலப்பாஷாணம்   
ஆதிவிராகபாஷாணம் - சோர பாஷாணம்   
ஆதிவிராசக்கள்ளி - மான்செவி  
ஆதிவிராட்டியம் - வெள்ளைப் பாஷாணம்    
ஆதுலம் - கள், பனங்கள்        
ஆதொண்டைக்கொடி - காத்தட்டிக் கொடி   
ஆத்தசக்கொடி - மொச்சை
ஆத்தரளிச்செடி - ஆற்றாளி
ஆத்திகக்கனி - அத்திப்பழம்
ஆத்திஷ்டிச்செடி - நீர்முள்ளி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal