சித்த வைத்திய அகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்
ஆத்திபோகிதக்கொடி - யானைக்குன்றிமணிக் கொடி
ஆத்திமரம் - காட்டாத்திமரம்
ஆத்திமாங்கிசச்செடி - வெட்கிப்பூச்செடி
ஆத்திமேற்புல்லுருவி - ஆயினிமேற்புல்லுருவி
ஆத்திமைக்காலிமரம் - வெண்கருங்காலிமரம்
ஆத்திரதம் - இஞ்சி
ஆத்தினிக்கிழங்கு - வெருகன்
ஆத்தினிச்சுவடி - யானைக்காற்சுவடிக்கொடி
ஆத்துக்காலிச்செடி - பூனைக்காலி
ஆத்துமகேசரி - நிலக்கடலை
ஆத்துமம் - அரத்தை
ஆத்துமுள்ளிச்செடி - கண்டங்கத்திரிச்செடி
ஆநகமரம் - தேவதாரிமரம்
ஆநந்தமூலி - கஞ்சா
ஆநந்தவாதிதபாஷாணம் - கெளரிபாஷாணம்
ஆநந்தவாதோதகச்செடி - வெண்குப்பைமேனிச்செடி
ஆநந்தவாரதிச்செடி - பேராமுட்டிச்செடி
ஆநீர் - பசுமூத்திரம்
ஆப்பிள்பழம் - சீமைpயலந்தை
ஆப்புராகிக்கொடி - வெண்குண்டுமணிக் கொடி
ஆப்புரிமரம் - எட்டிமரம்
ஆப்புவேணிகக்கொடி - வெண்கண்டங்கத்திரிக்கொடி
ஆப்புளண்டச்செடி - கையாந்தகரைச்செடி
ஆப்புளாகித்தண்டு - வெண்கீரை
ஆமகச்செடி - துவரைச்செடி
ஆமகோகிலக்கொடி- வெண்குன்றி மணிக்கொடி
ஆமடிகநவ்வல்மரம் - வெண்நவ்வல்
ஆமடிகமரம் - காஞ்சரைமரம்
ஆமணக்குச்செடி - முத்தாமணக்கு
ஆமணத்திரம் - கோரோசனை
ஆமரமரம் - எட்டிமரம்
ஆமரம்பழம் - எட்டிக்கனி
ஆமரிகமரம் - நெல்லிமரம்
ஆமருகாக்கொடி - வெண்கொம்பன் பாகற்கொடி
ஆமலகமரம் - நெல்லிமரம்
ஆமலாகரமரம் - வெண்கொய்யா
ஆமற்செடி - விஷமூங்கிற்செடி
ஆமாதிச்செடி - வெண்கொழுஞ்சிச்செடி
ஆமிரகநுரை - கடல்நுரை
ஆமிரகாக்கீரை - வெண்முள்ளி
ஆமிரமரம் - புளிமாமரம்
ஆமிலத்தாதிகச்செடி - வெண்துத்தி
ஆமிலமரம் - புளியமரம்
ஆமிலமாசுத்துவரை - வெண் துவரைச்செடி
ஆமிலம் - புளி
ஆமிலவனிதக்கொடி - புளிப்பிண்டுக்கொடி
ஆம்பலாச்செடி - புளியாரை
ஆம்பலிக்கடலை - வெண்பச்சைக்கடலை
ஆம்பல்காமரம் - நெல்லி
ஆம்பவக்கொடி - வெள்ளிண்டு
சித்த வைத்திய அகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

