சித்த வைத்திய அகராதி 1251 - 1300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1251 - 1300 மூலிகைச் சரக்குகள்


ஆம்பற்கொடி - அல்லிக்கொடி  
ஆம்பாரிகச்செடி - வெள்ளை வாடா மல்லிகைச்செடி    
ஆம்பாரைச்செடி - புளியாரை    
ஆம்பிரகக்கொடி - வெண்தூதுவளைக்கொடி    
ஆம்பிரமாமரம் - புளிப்புமாமரம்   
ஆம்பிரமூலகவேர் - வெட்டிவேர்  
ஆம்பிலஞ்செடி - சூரஞ்செடி         
ஆம்பிலிக்கனி - புளியம்பழம்   
ஆம்புலிச்செடி - காஞ்சொறி
ஆம்புலொசிதமரம் - வெள்ளுகா
ஆம்புவச்செடி - சூரஞ்செடி
ஆயப்பாலை - கொடிப்பாலை
ஆயிரங்காட்சித் தென்னை - அடுக்கிளநீர்த் தென்னை
ஆயிலாகியம் - வெண்மிளகு
ஆயிலியமரம் - உதரகிரிமரம்
ஆயினிமரம் - ஈரப்பலாமரம்
ஆயினிமேற்புல்லுருவி - ஆத்திமேற்புல்லுருவி
ஆய்ச்சாலிகச்செடி - வெண்மிளகாய்ச்செடி
ஆய்ச்சேவகச்செடி - வெள்ளெருக்கஞ்செடி
ஆய்மலர்க்கொடி - தாமரை
ஆய்மாலிகக்காய் - வெள்ளைமுள் முருங்கைமரம்
ஆரக்கமரம் - சந்தனமரம்
ஆரக்கமாதிகக்கொடி - வெள்ளைத்தாமரைக் கொடி
ஆரக்கம் - அரைத்தசந்தனம்
ஆரக்கூவகச்செடி - வெள்ளை நீர்முள்ளிச்செடி
ஆரசகமரம் - அகில்மரம்
ஆரவாலை - கோடகசாலை
ஆரஞ்சாகிக்கொடி - வெள்ளைப்பசளைக்கொடி
ஆரஞ்சிப்பழம் - குடையாரஞ்சி
ஆரத்தமரம் - அத்திமரம்
ஆரத்திராகம் - இஞ்சிக்கிழங்கு
ஆரத்தோதிகச்செடி - வெள்ளையடுக்கலரிச் செடி
ஆரமரம் - கடம்புமரம்
ஆரமாசகச்செடி - வெள்ளையலரி
ஆரமாமிகமரம் - ஆத்திமரம்
ஆரமாயிகச்செடி - வெள்ளைப்புளிச்சற்கீரை
ஆரம் - சந்தனம்
ஆராகசப்பூண்டு - வெள்ளைப்பூண்டு    
ஆராகரியமரம் - அரசமரம்       
ஆரிதவலரிச்செடி - வெள்ளையலரி    
ஆரியகச்செடி - சிறுகுறிஞ்சா      
ஆரியகாசக்கொடி - வெள்ளையல்லிக்கொடி
ஆரியவாசியம் - ஓமம்        
ஆரியவிசாகிகக்கொடி - வெள்ளையவரைக்கொடி   
ஆரியவிடையம் - அதிவிடையம்     
ஆரினி - மயானம்          
ஆருகதமரம் - நாவல்மரம்      
ஆருவம் - தண்ணீர்         
ஆரோகமரம் - ஆத்திமரம்       
ஆரேசகச்செடி - வெள்ளையாமணக்குச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal