சித்த வைத்திய அகராதி 1301 - 1350 மூலிகைச் சரக்குகள்
ஆரைக்காலிப்புல் - கோரைப்புல்
ஆரைக்கீரை - நீராரைக்கீரை
ஆரைக்குலகக்கொடி - வெள்ளையவரைக்கொடி
ஆரைக்கொடி - வல்லாரைக்கொடி
ஆரைச்சேவிதச்செடி - வெள்ளை எள்ளுச்செடி
ஆரைமாமரம் - அத்திமரம்
ஆரோகக்கீரை - சிறுகீரை
ஆர்க்கங்கிழங்கு - கோடங்கிழங்கு
ஆர்க்கரமரம் - கப்பட்டிமரம்
ஆர்த்தமரம் - ஆத்திமரம்
ஆர்த்தவச்செடி - பெருங்குறுந்தொட்டி
ஆர்த்திகம் - திப்பிலி
ஆர்த்திகோலகச்செடி - வெள்ளை விஷ்ணுகரந்தைச்செடி
ஆர்ப்பதுமம் - அரத்தை
ஆர்ப்போஷிதக்கொடி - வெள்ளை வெற்றிலைக்கொடி
ஆலகமரம் - நெல்லிமரம்
ஆலகமாதிதக்கிழங்கு - வெற்றிலை வள்ளிக்கிழங்கு
ஆலகாலம் - நஞ்சு, பச்சைநாபி
ஆலகாலம்போக்கிச்செடி - நிலவாகை
ஆலகிரிடைச்செடி - அலரி
ஆலங்கட்டி - துருசு
ஆலசியம் - சோம்பு
ஆலமரம் - மால்துயில்மரம்
ஆலமாதிதக்கடலை - வேர்க்கடலை
ஆலமாரிகமரம் - புங்குமரம்
ஆலமுடையோன் - துருசு
ஆலமேதமரம் - மாவுலிங்கமரம்
ஆலம் - துருசு
ஆலம்போக்கிச்செடி - நீலிச்செடி
ஆலவிருட்சம் - மால்துயில்விருட்சம்
ஆலாகதமரம் - வெண்மாதுளை
ஆலாங்கட்டி - கல்மழைக்கட்டி
ஆலாத்தி - சூடன்
ஆலிகாசக்கடலை - பச்சைகடலை
ஆலியகச்செடி - சிறுகுறிஞ்சா
ஆலியகோசவிரை - இஸ்கோல்விரை
ஆலின்மேற்புல்லுருவி - ஆவ்மேற்புல்லுருவி
ஆலின்மைக்கொடி - இடம்புரிக்காய்க் கொடி
ஆலீவ்செடி - சீமைச்செடி
ஆலகாதிச்செடி - இம்புராச்செடி
ஆலூகமரம் - வில்வமரம்
ஆலெசிதமரம் - இரங்கழிஞ்சில்
ஆலைக்கரும்புத்தட்டை - வெண்கரும்புத் தட்டை
ஆலைநிம்பமரம் - சருக்கரைவேம்பு
ஆவதமரம் - குங்குமமரம்
ஆவகாசிதமரம் - இரத்தக் கொய்யாமரம்
ஆவசோனிதமரம் - இரத்தப்புளி
ஆவரைச்செடி - ஆவிரிச்செடி
ஆவரைத்திரவியம் - ஆவரைப்பஞ்சாங்கம்
ஆவரைப்பஞ்சாங்கம் - இலை, பூ, பிஞ்சு, பட்டை, பிசின்
சித்த வைத்திய அகராதி 1301 - 1350 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

