சித்த வைத்திய அகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்
ஆவரைமேற்புல்லுருவி - ஆவிரிமேற்புல்லுருவி
ஆவலகபோளம் - இரத்தபோளம்
ஆவல்லிக்கொடி - சீந்திற்கொடி
ஆவல்லிவாழைமரம் - இரஸ்தாளி வாழைமரம்
ஆவாகைச்செடி - நிலவாகை
ஆவாவிருட்சம் - ஆதொண்டை
ஆவாவிரைச்செடி - ஆவிரை
ஆவிகக்கரும்பு - இராமக்கரும்பு
ஆவிபதச்செடி - பேராமுட்டி
ஆவிப்பத்திரம் - புகையிலை
ஆவிமரம் - தப்பிச்சிமரம்
ஆவிரங்காய் - ஆவாரைக்காய்
ஆவிரிச்செடி - ஆவரைச்செடி
ஆவிரேகக்கொடி - இராமக்குமிட்டி
ஆவிரைச்செடி - ஆவரை
ஆவிற்கோவைக்கொடி - இராமக்கோவைக் கொடி
ஆவிற்புங்குமரம் - நொச்சுளிமரம்
ஆவினம் - புல்லுருவி
ஆவின்குளம்படி - மாட்டுக்குளம் படி
ஆவின்தரங்கப்புல் - வாசனைப்புல்
ஆவின்பால் - பசுவின்பால்
ஆவின்பொகுட்டிச்செடி - இருப்பவற்செடி
ஆவின்னுருவி - புல்லுருவி
ஆவுகாந்துளசிச்செடி - இராமத்துளசிச்செடி
ஆவெண்ணெய் - பசுவெண்ணெய்
ஆளகக்கொடி - சுரைக்கொடி
ஆளன் - கறையான்
ஆளிகரைத்தான் - புளியமரம்
ஆளிவிரை - அளசிவிரை
ஆள்ச்சுணங்கிச்செடி - தொட்டால் வாடி
ஆள்மறித்தான்புல் - இராவணன் மீசைப்புல்
ஆள்வணங்கிமரம் - அரசமரம்
ஆள்வந்திகா மரம் - இரும்பகமரம்
ஆள்வல்லிக்கிழங்கு - மரவள்ளிக் கிழங்கு
ஆள்வள்ளிக்கிழங்கு - மலைச்சருக்கரைவள்ளிக் கிழங்கு
ஆள்வாடைதட்டிச்செடி - நோக்குநொக்கிச்செடி
ஆள்வாரிதிமரம் - அரசமரம்
ஆற்கோரமரம் - கொன்றைமரம்
ஆற்சாலகச்செடி - தொட்டால்வாடிச்செடி
ஆற்றலரிச்செடி - காட்டலரி
ஆற்றாலின்சத்து - சிலாசத்து
ஆற்றுத்தும்மட்டிக் கொடி - பேய்க்குமிட்டிக்கொடி
ஆற்றுத்தூம்பறுகு - உப்பறுகுப்புல்
ஆற்றுநெட்டிக்கொடி - நீர்ச்சுண்டிக்கொடி
ஆற்றுப்பச்சை - நாகப்பச்சை
ஆற்றுப்பஞ்சிச்செடி - கடற்கொழுஞ்சிச் செடி
ஆற்றுப்பாசி - நீர்ப்பூண்டு
ஆற்றுப்பூக்காலிக்கொடி - பூனைக்காலிக் கொடி
ஆற்றுப்பூச்சேவகச்செடி - உமுரி
ஆற்றுப்பூவரசு - செடிப்பூவரசு
சித்த வைத்திய அகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

