சித்த வைத்திய அகராதி 1401 - 1450 மூலிகைச் சரக்குகள்
ஆற்றுமரிச்செடி - உமரிச்செடி
ஆற்றுமருந்துச்செடி - ஆற்றலரி
ஆற்றுமரோகம்நீக்கிச்செடி - அவுரிச்செடி
ஆற்றுமல்லிகை - காட்டுமல்லிகை
ஆற்றுமாலிகம் - உப்பிலான்கொடி
ஆற்றுமுள்ளங்கிச்செடி - சுவற்று முள்ளங்கிச்செடி
ஆற்றுமுள்ளாகிகச்செடி - ஊசிக்குறண்டைச்செடி
ஆற்றுமுள்ளிச்செடி - சிவப்புமுள்ளிச்செடி
ஆற்றுமேலழகிச்செடி - சேம்பு
ஆனகக்கொடி - சுரைக்கொடி
ஆனகிப்பயறு - உளுற்தம்பயறு
ஆனத்தேர்ச்செடி - விடத்தேரி
ஆனந்தகந்தம் - மருக்கொழுந்து
ஆனந்தசாரம் - அரத்தை
ஆனந்தசோபிதம் - கஞ்சா
ஆனந்தரத்தை - சித்தரத்தை
ஆனந்தவாதி - கெளரிபாஷாணம்
ஆனாந்தளைச்செடி - காட்டுக்கறிவேப்பிலைச்செடி
ஆனிகாக்கொடி - ஊசலாங்கொடி
ஆனைக்கன்றுமரம் - அத்திமரம்
ஆனைக்கொம்பன்வாழை - மொந்தைவாழை
ஆனைத்தடிச்சல்கிழங்கு - புளிநாளைக்கிழங்கு
ஆனைத்தாவிதக்கொடி - ஊசிப்பசலைக்கொடி
ஆனைத்திப்பிலி - பெருந்திப்பிலி
ஆனைத்தும்பைச்செடி - பெருந்தும்பைச்செடி
ஆனைத்தேரிமரம் - ரோமவேங்கை
ஆனைநெருஞ்சிச்செடி - பெருநெருஞ்சிற்செடி
ஆனைநொச்சி - கருநொச்சி
ஆனைமரம் - அத்திமரம்
ஆனையறுகு - பேரறுகு
ஆனைவணங்கிச்செடி - தேட்கொடுக்குச்செடி
ஆனைவாழை - மொந்தன்வாழை
ஆனைவேணிமரம் - பொற்கொன்னைமரம்
ஆன்மதசேகம் - குமரிக்கற்றாழை
இகசுச்செடி - நீர்முள்ளிச்செடி
இகசேபமரம் - எழுமுள்மரம்
இகலிக்கொடி - பெருமருந்து
இகளை - வெண்ணெய்
இகனியிலை - வெற்றிலை
இகுசாகியச்செடி - எள்ளுச்செடி
இகுசிமரம் - மூங்கில்மரம்
இகுசொபிதமரம் - ஏரழிஞ்சி
இகுடிக்கொடி - காத்தொட்டி
இகுந்தகம் - ஐங்கணுக்கள்ளி
இகுளிமரம் - கொன்றைமரம்
இகுளோதயப்புல் - ஒட்டுப்புல்
இக்குசாமஞ்சள் - கஸ்தூரிமஞ்சள்
இக்குசாமத்தட்டை - கரும்பு
இக்குவிருட்சம் - கருமருதோன்றி
இங்குசிச்செடி - நீர்முள்ளி
சித்த வைத்திய அகராதி 1401 - 1450 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

