சித்த வைத்திய அகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்


இங்குசேபம் - ஓடான்கொடி
இங்குதாதிக்கொடி - பீதரோகணிக்கொடி
இங்குதாநிபமரம் - கருக்குவாய்ச்சி மரம்
இங்குதூரிதம் - கோரோசனை
இங்குபோளம் - கரியபோளம்
இங்குயின்மரம் - பெருமரம்
இங்குரசாலிகமரம் - ஒட்டுப்பலா
இங்குராமம் - பெருங்காயம்
இங்குலிசமரம் - கருங்குங்கிலியம்
இங்குலிசம் - சாதிலிங்கம்
இங்குலொகிதம் - ஒட்டுமாமரம்
இசங்குச்செடி - சங்கஞ்செடி
இசபிமூலச்செடி - உரளிச்செடி
இசருகச்செடி - சிறுதும்பை
இசலிகாமரம் - ஒட்டைமரம்
இசவில்மரம் - கொன்றைமரம்
இசவேல்மரம் - ஒடைமரம்
இசிகடுகு - செங்கடுகு
இசிகாமரம் - கருங்குருந்துமரம்
இசிதாருமரம் - கடம்பமரம்
இசிதாலிகப்பூண்டு - ஒருத்தலை வெள்ளைப்பூண்டு
இசிமலக்கொடி - பேய்ப்புடல்
இசுதாருமரம் - கடம்பமரம்
இசைமுடிச்செடி - சிலந்திநாயகம்
இசைமுட்டிமரம் - செருந்திமரம்
இஸ்கோல்விரை - இஸ்போகல்
இச்சத்திமரம் - இலந்தைமரம்
இச்சிமரம் - இத்திமரம்   
இச்சியாமிக்காய் - சீயக்காய் 
இச்சிரோகிணிச்செடி - கடுகுரோகிணி        
இச்சுச்செடி - ஈஞ்சுச்செடி    
இஞ்சங்கிழங்கு - வெந்தோன்றி  
இஞ்சாகிகக்காய் - ஏலக்காய்   
இஞ்சிகாக்கொடி - கொத்தான்   
இஞ்சிகைச்செடி - ஓமச்செடி   
இஞ்சிச்செடி - இஞ்சிக்கிழங்கு      
இஞ்சோபிதமரம் - ஏழிலைப்பாலை   
இடங்கணம் - வெங்காரம்     
இடங்கணேயக்கீரை - மயிலி    
இடங்கப்பட்டை - இலவங்கம்   
இடங்கலிமரம் - வீழிமரம்   
இடபவாகனவேம்பு - சிவனார்வேம்புச்செடி  
இடம்பகமரம் - நாவல்மரம்
இடம்புரிக்காய் - திருகுக்காய் 
இடவயமரம் - மலைப்பாலைமரம்
இடாடிகமாதளை - தாதுமாதளை 
இடிகக்கொடி - பெருமருந்து 
இடிசிகரமரம் - கோங்கிலவுமரம்
இடுகாட்டவரை - சுடலையாவரை
இடுகாலிக்கொடி -  பீர்க்குக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal