சித்த வைத்திய அகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்


இடுகாறிக்கொடி - பேய்ப்பீர்க்கு
இடுகீசலச்செடி - மாட்டுக்குளம்படிச்செடி   
இடுகொள்ளுச்செடி - கொள்ளு 
இடுகௌசிகச்செடி - மான்குளம்
இடும்பாகக்கொடி - கொத்தான்
இடும்போகக்கொடி - சிவப்பவரை
இஷ்டாயிதச்செடி - ஆமணக்கு      
இணகாலக்கொட்டை - நேர்வாளக்கொட்டை         
இணங்கன் - வெடியுப்பு  
இணங்குசச்செடி - பைசாசமுள்ளிச்செடி
இணர்க்கிழங்கு - கிச்சலிகிழங்கு         
இணர்ச்சேசிதமரம் - ஒடுவைமரம்
இணர்மாமரம் - மாமரம்
இணர்மேலிதச்செடி - ஏழிலைவள்ளிச்செடி
இண்டஞ்செடி - புலிதொடக்கி
இண்டாசிதச்செடி - கசப்புப் புகையிலை
இண்டுச்செடி - ஈயச்செடி
இண்டூகிதக்கொடி - கசப்புவெள்ளரிக்கொடி
இண்டைக்கொடி - புலிதொடக்கி
இதயகாளிச்செடி - சிறுதக்காளி
இதழிமரம் - கொன்றைமரம்
இதளைவிருட்சம் - நந்திவிருட்சம்
இதிரைக்கிழங்கு - காட்டுக்கரணை
இதூகமிளகு - வெண்மிளகு
இதைக்கான்பயறு - காராமணிப்பயறு
இத்தகமிளகு - வால்மிளகு
இத்திமரம் - இச்சிமரம்
இத்திமாலகச்செடி - கஞ்சாங்கோரைச் செடி
இத்துப்புல் - காவட்டம்புல்
இத்துமானந்தக் கிழங்கு - சிறுநரளைக்கிழங்கு
இந்தம் - புளி
இந்திரகெந்தம் - நன்னாரி
இந்திரசாலிமரம் - அழிஞ்சில்
இந்திரசுகந்தக்கொடி - நன்னாரி
இந்திரதரு - மருதமரம்
இந்திரபமரம் - வெட்பாலைமரம்
இந்திரபாசிதமரம் - கடம்பமரம்
இந்திரபுட்பம் - வெந்தோன்றி
இந்திரப்பிரியமரம் - சந்தனமரம்
இந்திரவல்லிக்கொடி - முடக்கொத்தான்கொடி
இந்திரவாகனச்செடி - மேகசஞ்சீவிச் செடி
இந்திரவாசக்கொடி - நெய்தல்
இந்திரவாமச்செடி - கரிப்பான்
இந்திரவாருணிக்கொடி - பேய்த்தும்மட்டிக் கொடி
இந்திரவாழைமரம் - கானல் வாழைமரம்
இந்திராணம் - நொச்சிச்செடி
இந்திராணிகமரம் - புங்குமரம்
இந்திரிகக்கொடி - நன்னாரி
இந்திரியப்பாலைமரம் - வெட்பாலைமரம்
இந்திரியம் - சுக்கிலம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal