சித்த வைத்திய அகராதி 1101 - 1150 மூலிகைச் சரக்குகள்
ஆகுவாகனன்மெச்சுமிலை - வில்வம்
ஆகேவகமுள்ளிச்சசெடி - பேய் முள்ளிச்செடி
ஆகேறுமரம் - கொன்றைமரம்
ஆங்கிரிவு - சுக்கிலம்
ஆசாசிக்கொடி - சீந்திற்கொடி
ஆகாநங்கை - ஆதளைச்செடி
ஆசியசீரகம் - கருஞ்சீரகம்
ஆசியசூதப்புல் - பேய்வரகு
ஆசியபத்திரக்கொடி - தாமரை
ஆசியபோதமரம் - பேய்வாதுமை
ஆசினிமரம் - ஈரப்பலாமரம்
ஆசுக்காயம் - பேய்வெங்காயம்
ஆசுணமரம் - அசோகுமரம்
ஆசுபத்திராமரம் - அகச்சூலி
ஆசுரப்பூடு - வெள்ளைப்பூடு
ஆசுரம் - இஞ்சி
ஆசுராகிதக்காய் - பேரிக்காய்
ஆச்சமாகப்புல் - மூகைப்புல்
ஆச்சமாதிகக்கொடி - மலைவெற்றிலைக்கொடி
ஆச்சாசினிமரம் - ஆச்சாமரம்
ஆச்சாசோபிகச்செடி - மஞ்சட் கிலுகிலுப்பைச்செடி
ஆச்சாமரம் - ஈன்மரம்
ஆச்சுகாசிமரம் - மஞ்சட்கோங்கு
ஆச்சுவரிமரம் - அரசமரம்
ஆஞ்சரிணச்செடி - காட்டுத்துளசி
ஆஞ்சிச்செடி - ஏலச்செடி
ஆஞ்சித்தாழைமரம் - மஞ்சட் தாழைமரம்
ஆஞ்சிறிகச்செடி - சங்குச்செடி
ஆடகக்குடோரிமரம் - மயிலாடுங் குருந்துமரம்
ஆடகச்செடி - துவரைச்செடி
ஆடகத்திப்பாஷாணம் - குங்கும பாஷாணம்
ஆடகமரம் - துவரைமரம்
ஆடகாவிகமரம் - மரவுரிமரம்
ஆடமணக்குச்செடி - ஆமணக்கு
ஆடமாகிதச்செடி - மலைச்செந்தொட்டிச்செடி
ஆடலைமரம் - அரசமரம்
ஆடாதோடைச் செடி - கவீரகம்
ஆடியகூத்தன்மரம் - தில்லைமரம்
ஆடுதின்னாப்பாளை - பங்கம்பாளை
ஆடைக்காதிமரம் - மலைப்பருத்தி
ஆடையொட்டிச்செடி - ஒட்டுச்செடி
ஆடையொட்டிநீர் - சுக்கிலம்
ஆட்கொல்லிமரம் - தில்லைமரம்
ஆட்கொல்லிவிரை - தில்லம்விரை
ஆட்டாங்கள்ளி - திருகுகள்ளி
ஆட்டாங்கொறுக்கு மரம் - மலைத்துவரை மரம்
ஆட்டாங்கோரைப்புல் - சிறுகோரைப் புல்
ஆட்டினிமரம் - மலைப்பூவரசமரம்
ஆட்டுக்கால்செடி - அடம்பு
ஆட்டுச்சக்கரணிமரம் - மலை யரளி
சித்த வைத்திய அகராதி 1101 - 1150 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

