சித்த வைத்திய அகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்


அனூபகம் - இஞ்சிக்கொப்பு   
அனோபகமரம் - பேய்தேற்றாமரம்
அன்பரிசப்பூ - கிளிஞ்சற் சுண்ணாம்பூ    
அன்புவேணிகைச்செடி - சிவப்புப்பாவட்டைச்செடி     
அன்றொpத்தான்பூடு - புள்ளடி   
அன்னகாளிகைச்செடி - சிவப்பு பொன்னாங்கண்ணிச்செடி  
அன்னசுத்தி - நெய்      
அன்னபமரம் - ஆலமரம்    
அன்னபூரணக்கொடி - சிறுகட்டுக் கொடி  
அன்னப்பாகு - கஞ்சி        
அன்னமரிசி - நெல்லரிசி    
அன்னமாசகிமரம் - சிறுகாஞ்சொறி     
அன்னம் - சோற்றுக்கற்றாழை  
அன்னரசம் - அன்னசாரம்       
அன்னாசித்தாழை - பறங்கித் தாழை    
அன்னாசிநெல்லு - பேய்நெல்லு, மலைநெல்லு          
அன்னாசிப்பழம் - பறங்கித்தாழைப்பழம்    
அன்னுகக்கொடி - பேய்ப்பசலி  
அன்னுகப்பருத்திச்செடி - பேய்ப் பருத்திச்செடி
அன்னோபிதக்கொடி - மஞ்சட்குண்டுமணிக்கொடி
ஆகக்கொடி - சுரைக்கொடி
ஆகநாமிக்கொடி - அவரைக்கொடி
ஆகரிக்கொடி - சிறுகட்டுக்கொடி
ஆகாசகங்கை - பனிநீர், அமுரிநீர்
ஆகாசக்கருடக் கிழங்கு - கொல்லன்கோவைக்கிழங்கு
ஆகாசக்கருடக்கீரிகக் கொடி - பேய்ப்பாலைக் கொடி
ஆகாசக்கருடக்கொடி - கொல்லன்கோவைக்கொடி
ஆகாசக்கருடாசலமரம் - பேருடைமரம்
ஆகாசக்கருடாதிமரம் - பேயத்தி
ஆகாசதங்குசக்கொடி - பேய்ப்பாகற்கொடி
ஆகாசதந்தம் - நகம்
ஆகாசதானம் - கொட்டைப்பாசி
ஆகாசத்தாமரை - குளிதாமரை
ஆகாசமையம் - சூனியம்
ஆகாசவிந்து - விந்து
ஆகாசவுருவி - புல்லுருவி
ஆகாசவெள்ளரி - முள்வெள்ளரி
ஆகாசவேணிக்கொடி - பேய்ப்பீர்க்கங்கொடி
ஆகாடமோனிச்செடி - வெண்நாயுருவிச்செடி
ஆகாடமௌணிகச் செடி - பேய்ப் புகையிலைச்செடி
ஆகாயக்கக்கரி - முள்வெள்ளரி
ஆகாயப்பாசி - உசிலம்பாசி
ஆகாயப்பூரிதக்கொடி - பேய் முசுட்டைக்கொடி
ஆகாயமாஞ்சில் - சடாமாஞ்சில்
ஆகாயவல்லிக்கொடி - சீந்தில்
ஆகாயவெளி - மூளை
ஆகாயவெள்ளரி - முள்வெள்ளரி
ஆகிராந்தமரம் - புங்குமரம்    
ஆகிரிவாளர் - பகையாளர்   
ஆகுபாஷாணம் - எலிபாஷாணம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal