சித்த வைத்திய அகராதி 151 - 200 மூலிகைச் சரக்குகள்
அசிபகாந்தச்செடி - கருவீழிச்செடி
அசிபத்திரத்தட்டை - கரும்புத்தட்டை
அசீவம் - மரணம்
அசுணப்பூடு - வெள்ளைப்பூண்டு
அசுதகிமரம் - கருவேம்புமரம்
அசுவகந்தி - அமுக்கிராச்செடி
அசுவக்கிழங்கு - அமுக்கிராக்கிழங்கு
அசுவசட்டிரக்கொடி - நெருஞ்சில்
அசுவசாம்பிரப்பூ - கருப்பு மந்தாரைப்பூ
அசுவச்செடி - அமுக்கிராச்செடி
அசுவத்தமரம் - அரசமரம்
அசுவத்தாதிக்காய் - கருப்பு வழுதலங்காய்
அசுவாபரிச்செடி - அரளிச்செடி
அசுவாபாணிதமரம் - கருமருதோன்றிமரம்
அசுவாமணக்குச்செடி - சிறு பூளை
அசூசம் - சூதகம், அசுத்தம்
அசோகமரம் - அசோகுமரம்
அசோகாதிதச்செடி - சிவதுளசி
அசோகுமரம் - கோபிகமரம்
அசோடகத்திமரம் - சிவப்பகத்திமரம், செவ்வகத்தி மரம்
அசோணப்பழம் - வாழைப்பழம்
அசோணமரம் - வாழைமரம்
அசோண்டிக்கொடி - குறட்டைக்கொடி
அசோண்டிப்பழம் - குறட்டை
அசோதகிச்செடி - அவுரிச்செடி
அச்சகச்செடி - நீர்முள்ளிச்செடி
அச்சஞ்செடி - குட்டியச்சஞ்செடி
அச்சதாப்பிரியமரம் - கருவாழை
அச்சத்திரிச்செடி - கத்திரிச்செடி
அச்சபாப்புல் - நாணற்புல்
அச்சபாணிகச்செடி - சிவப்பம்மான் பச்சரிசிச்செடி
அச்சமப்புல் - முசுறுப்புல்
அச்சமரம் - மாவச்சமரம்
அச்சமாயிதக்கொடி - சிவப்புக் கழற்சிக்கொடி
அச்சம்பபோளச்செடி - சிவப்பு அடுக்கலரிச்செடி
அச்சாணிமரம் - கருவேம்புமரம்
அச்சாணிமூலிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
அச்சினிமாதம் - எட்டாம்மாதம்
அச்சுரக்கொடி - நெருஞ்சிக்கொடி
அச்சுரை - உடம்பு, சரிரம்
அச்சுவத்தமரம் - அரசுமரம்
அச்சுவாதீதச்செடி - சிவப்புக்காரளிச்செடி
அஞ்சலிக்கொடி - வரற்சுண்டி
அஞ்சலிப்பாளைச்செடி - ஆடுதின்னாப்பாளைச்செடி
அஞ்சனகுமாரிச்செடி - சிமிட்டிச்செடி
அஞ்சனக்கல் - கருநிமிளை
அஞ்சனத்திரவியம் - ஐங்கோலத்தைலம்
அஞ்சனபாஷாணம் - வான்சோதி பாஷாணம்
அஞ்சனபோளம் - கரியபோளம்
அஞ்சனவேர் - அவுரிவேர்
சித்த வைத்திய அகராதி 151 - 200 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal